FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Arul on September 29, 2013, 10:13:57 PM
-
எங்கள் தென்னை மரத்தில் கூடு கட்டி
விளையாடிய தூக்கனாங் குருவிகள் எங்கே
என் வீட்டு முற்றத்தில் கூடு கட்டி கொஞ்சி
விளையாடிய சிட்டுக் குருவிகளும் எங்கே
தென்னை மரத்தில் இருந்து செங்குத்தாய்
கீழே குதித்து நீந்தி விளையாடிய கிணறுகளும் எங்கே
நாங்கள் சந்தோசத்தில் ஆக்கி தின்ற கூட்டஞ்சோறும்
கில்லி,நொண்டி,கபடி,கண்ணாமூச்சி,கிச்சு கிச்சு தம்பளம்
என்று விளையாடிய விளையாட்டுக்களும் எங்கே
ஆடு , மாடுகளுடன் துள்ளி விளையாடிய
பச்சை பசேலென இருந்த வயல் வெளிகள் எங்கே
அனைத்தும் இன்று கனவுகளாக என் கண் முன்னால்
முன்னேற்றம் என்ற போர்வையில் சந்தோசங்களை
அழித்து புன்னகையும் ஒழித்து அனைத்தையும் இழந்த இந்த வாழ்க்கை உயிர் இருந்தும் பிணமானது போல் ……………………………….
-
இந்த கவிதையை படிக்கும் போது எனக்கும் சிறு வயதின் நினைவுகள் வருகிறது. இன்று அந்த நினைவுகள் அனைத்து கானல் நீராகவே மாறிவிட்டது. இன்றைய சூழ்நிலையில் ஆரோக்கியமான விளையாட்டுக்களை விட்டு விட்டு கணினியின் முன் விளையாடும் விளையாட்டுகளுக்கு மக்கள் அடிமை ஆகி விட்டார்களே. இவர்களுக்கு அந்த விளையட்டுக்களின் அருமை தெரியாமலே பொய் விட்டது என்று நினைக்கும் போது வருத்தமாக உள்ளது அருள்.
என்னுடைய பழைய நினைவுகளை திரும்ப தந்தமைக்கு நன்றி அருள்.
நல்ல கவிதை!
வாழ்த்துக்கள்!
-
மிக்க நன்றி YouSuF
இன்றைய குழந்தைகளுக்கு இந்த மகிழ்ச்சிகள் அனைத்தும் கானல் நீர் தன் மிக அழகாக சொன்னீர்கள்......................