FTC Forum

தமிழ்ப் பூங்கா => இங்கு ஒரு தகவல் => Topic started by: Yousuf on November 12, 2011, 09:28:21 AM

Title: அறிவில் இல்லை அன்பின் அளவுகோல்..!
Post by: Yousuf on November 12, 2011, 09:28:21 AM
ஓரிறையின் நற்பெயரால்

    உங்களுக்கு படிக்கும் வயதில் குழந்தை இருக்கிறார்களா...?
    அதுவும் சுமாராக தான் படிக்கிறார்களா..?



அப்போ கண்டிப்பாக இந்த ஆக்கம் பயன்படும்... அவர்களுக்கு இல்லை... பெற்றோர்களான உங்களுக்கு..!

"தந்தை தன் மக்களுக்கு அளித்திடும் அன்பளிப்புக்களில் மிகச் சிறந்தது நல்ல கல்வியாகும்..!"
 -நபிகள் நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹிவ ஸல்லம் அவர்கள்
[நூல்: திர்மிதீ; அறிவிப்பாளர்: ஸயீது பின் ஆஸ்(ரலி)].


     நம்மில் பலருக்கும், ஏன் அனைவருக்குமே தம் பிள்ளைகள் நல்ல முறையில் கல்வி கற்கவேண்டும்., அதனடிப்படையில் நல்ல வேலை வாய்ப்பு, வசதிப்பெற்று சமூகத்தில் வாழவேண்டும் என்பது தான் தம்மோடு கலந்து விட்ட இறந்த காலம் தொடங்கி எதிர்காலத்திலும் நீடிக்கும் கனவாக இருந்தது -இருக்கிறது!.

  குறைந்த பட்சம் தான் படித்த அளவைக்காட்டிலும் சற்றுக்கூடுதலாக தம் பிள்ளைகள் படிக்க வைக்க வேண்டும் என்ற எண்ணமே பெரும்பாலான நடுத்தர வர்க்க பெற்றோர்களின் வாழ்க்கையில் பெரும்பகுதியை ஆக்ரமித்திருக்கின்றது.

   ஆக பிள்ளைகளின் எதிர்க்காலம் மேம்பட வேண்டும் என்ற எண்ணத்தில் அவர்களின் கல்விக்காக தங்களின் நிகழ்காலத்தை பொருளாரதாரரீதியாகவும் - உடலியல் செய்கைரீதியாகவும் பெற்றோர்கள் செலவழிக்கிறார்கள்.

பிள்ளைகளின் கல்வியின் திறனை அதிகரிக்கும் நோக்கில் சில நிகழ்வுகளை பெரும்பாலான பெற்றோர்கள் மேற்கொள்கின்றனர்

1. சரியாக படிக்காத, பள்ளிக்கு செல்லாத காரணத்தால் அவர்களை திட்டுதல் அல்லது அடித்தல்
2. ஏனைய மாணவர்களுடன் தம் பிள்ளைகளின் கல்வி திறனை ஒப்பீட்டுக்குறை கூறுதல்.
3. முதல் தரம் வாங்க வேண்டும் என்பதற்காக அவர்களுக்கு பரிசுகள் வழங்குதல் ,சக பிள்ளைகள் மத்தியில் பாராட்டுதல்.

  மேற்கண்ட நிலைகள் வெளிப்படையாக, அவர்களின் மேம்படும் கல்விக்கான வழிமுறை செயலாக தெரிந்தாலும் இவற்றால் நேரடி மற்றும் மறைமுக எதிர் விளைவுகள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது- இதை விளக்கவே இவ்வாக்கம்.,

    சரியாக படிக்காத அல்லது பள்ளிக்கு ஒழுங்காக செல்லாத காரணத்தால் பிள்ளைகளை திட்டுதல் அல்லது அடித்தல் என்பது அவர்களின் எண்ணங்களை குறைந்த விகிதமே மாற்றவல்லது., ஏனெனில் அடி, திட்டுக்கு பயந்து தான் பள்ளிக்கு செல்வார்களே, தவிர உண்மையாக பிற்கால பயன்பாட்டை கருதி செல்லமாட்டார்கள், அதுவும் குறிப்பிட்ட காலம் வரை மட்டும் தான் ,ஏனெனில் இதே நிலை தொடரும் போது பெற்றோர்கள் மீதான பயம் வெறுப்பாக மாறி அவர்களின் அன்பையும் தூக்கியெறிய நேரிடும்.

   ஆக பள்ளிக்கு செல்லவில்லையென்றால் அடித்தல் திட்டுதல் போன்றவை ஆரோக்கியமற்ற எதிர்விளைவை தான் எற்படுத்தும். அப்படி ஏற்படும் நேர்மறை விளைவுகளாக இருப்பினும் கூட அவை தற்காலிகமானதுதான் தவிர நன்மையின்பால் நிரந்தர தீர்வை எற்படுத்தாது.

   அடுத்து, தம் பிள்ளைகளின் கல்வியின் நிலையை சக பிள்ளைகளோடு ஒப்பிட்டு அறிவது.,

 இது மிகப்பெரிய தவறான வழிமுறையாகும். ஏனெனில் ஒப்பிடும் இரு நிகழ்வுகளின் விளைவு சமமாக இருக்கவேண்டுமென்றால் அவை இரண்டும் ஒரே நிலையை அடிப்படையாகக்கொண்ட காலம், சூழல் சமுக பிண்ணனி கொண்டதாக இருக்க வேண்டும் அப்போது தான் ஒப்பிடும் ஒன்றின் திறன் மற்றொன்றை விட கூடுதல் குறைவாக இருப்பின் குறைக்கூற முடியும்.,

   ஆனால் நம் பிள்ளைகளை ஏனைய மாணவர்களோடு ஒப்பிடும் போது இவற்றை கருத்தில் கொள்வது இல்லை., மாறாக அவன் நன்றாக படிக்கிறான் - இருவரும் ஒரே வகுப்பு என்ற பொது நிலை ஒப்பீட்டை மட்டுமே அங்கு அளவுக்கோலாகக் கொள்கிறோம்.

  மாறாக அவர்களின் குடும்பம்,  சார்ந்து இயங்கும் சூழல் மற்றும் வாழ்க்கை வசதிகளின் பிண்ணனியை முன்னிருத்தி ஒப்பு நோக்கிவதில்லை., இதனால் சரிவர படிக்காத பிள்ளைகளுக்கு தாழ்வு மனபான்மை ஏற்படுவதுடன் நம் சூழலும் அதுப்போல இல்லையே என சமுகத்தின் மீதான கோபம் அதிகரிக்கவும் செய்யும்.

மூன்றாவதும் மிக முக்கியமானதும் பரிசு வழங்குதல்...!
   முதல் தரம் எடுத்தால் பரிசு வழங்குதல் என்ற எதிர்வினையற்ற நன்மை தரும் ஒரு செய்கை எப்படி அவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்...? என இதைப்படிக்கும் பலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தும்., ஆனால் சில வேளைகளில் இச்செயல்பாடு மறைமுக பிரச்சனைகளை தான் உருவாக்கத்தான் செய்யும்.

    ஒரே விட்டில் இரு பிள்ளைகள் படிக்கும் போது கண்டிப்பாக இருவரும் சரிசமமான ஒரே விகித அளவில் படிக்க வாய்ப்பில்லை ஒருவரைக்காட்டிலும் ஒருவர் கூடுதல் அல்லது குறைவான கல்வித்திறனோடு தான் இருக்க வாய்ப்பு அதிகம்.,

  ஆக அச்சூழலில் முதல் தரம் எடுக்கும் பிள்ளைக்கு நாம் பரிசு வழங்குவது அல்லது அவன் கேட்டதை வாங்கி தருவது அவனது கல்வியை இன்னும் மேம்படுத்தும் என்பது ஒரு கோணத்தில் உண்மையாக இருந்தாலும் பிறிதோரு கோணத்தில் இரண்டு எதிர் விளைவுகள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது.

     பெற்றோர்களின் பரிசு மற்றும் பாராட்டை கண்டிப்பாக பெற வேண்டும் என்ற நோக்கிலும், தம் நிலையை தொடர்ந்து முதல் தரத்தில் தக்க வைத்துக்கொள்ள வேண்டுமென்ற ஆக்கிரமிப்பு எண்ணங்களும் தேர்வு நேரங்களில் அதிக முயற்சி, கடின உழைப்பு போன்றவற்றை தாண்டி முரண்பாடாய் ஒரு நிலைக்கு மேல் போய் பயமாக மாறுவதற்கும் வாய்ப்பு இருக்கிறது. அத்தோடு தேர்வின் முடிவுகளில் தம் நிலையில் பின்னடைவு ஏற்பட்டால் தம்மால் தொடர் அந்தஸ்தை பெற்றோர்கள் மத்தியில் பெற முடியவில்லையே என்ற தேவைற்ற குற்ற உணர்ச்சி எண்ணங்கள் மனச்சிதைவை தான் ஏற்படுத்தும்.

     மேலும், தமக்கு மத்தியில் படிப்பிற்கேற்ப வெகுமதி வழங்கப்படும் நிலை தொடர்வதை கண்டு,  சரிவர படிக்க இயலாத பிள்ளைக்கு ஒரு தலைப்பட்சமாக செயல்படுவதாக எண்ணி தம் பெற்றோர்கள் மீது கோபமும், தம் திறன் குறைபாடு உடையது, ஆக தம் பெற்றோர்கள் கவனம் நன்றாய் படிக்கும் அவனை நோக்கியே இருப்பதாக நினைத்து தாமாகவே உளவியல் பிரச்சனைக்கு ஆளாக நேரிடும். உளவியல் ரீதியாக பிரச்சனைக்குள்ளாகும் போது...


    புறிதிறன் அம்சங்களில் பெரும் அளவில், நரம்பியல் ரீதியான புரிதிறன் குறைபாடு, நினைவாற்றல், கவனம் செலுத்துதல், பிரச்சினைகளை தீர்த்தல், இயக்கச் செயல்பாடு, சமூகப் புரிதிறன் ஆகியவற்றில் மழுங்கிய விளைவு பிரதிபலிக்கக் கூடும். (விக்கி பிடியா)

ஆக பெற்றோர்களாகிய நாம்., முதலில் பிள்ளைகளின் படிப்பு தொடர்பாக அவர்களின் கல்வித்திறனை மேம்படுத்த செய்கைரீதியான மாற்றங்கள் ஏற்படுத்துவதை விட சிந்தனைரீதியான மாற்றங்கள் ஏற்படுத்துவதே காலச்சிறந்தது, அவர்களை திட்டுவதோ அடிப்பதோ அல்லாமல் அவர்கள் தாமாகவே முன்வந்து படிக்கும் சூழலை உருவாக்க வேண்டும்.

   அதற்கான வழிமுறைகளில் முக்கியமானது, பிள்ளைகளுக்கு பெற்றோர்களாகிய நம் மீது முழு நம்பிக்கை ஏற்பட செய்ய வேண்டும். அதற்கு முன்பாக நாம் அவர்களுக்கு முழுவதுமான பாசத்தையும், நேசத்தையும் அளிக்கவேண்டும்.


ஏனெனில் ஒரு வினைக்கு மாற்றாக உருவாகும் எதிர்வினையானது அதிக அளவில் வெளிப்படுவதை விட அழகிய முறையில் வெளிபடுவதே சிறந்த ஒன்றாகும்

  ஆனால் மாறாக நாமோ பெரும்பாலும் அவர்களின் அறிவுக்கேற்ற செயல்பாடுகளை வைத்தே அவர்கள் மீது அன்பை வெளிப்படுத்துகிறோம். இது முற்றிலும் தவறான பண்பு. மனிதனை தவிர ஏனைய உயிரினங்கள் அனைத்தும் அன்பு செலுத்துவதற்கு அறிவை அளவுகோலாக பயன்படுத்துவதில்லை., ஆனால் நாம் மட்டுமே அன்பின் வெளிப்பாட்டிற்கு அறிவை ஒரு அளவுகோலாக வைத்திருக்கிறோம் அதன் தாக்கம் நம் பிள்ளைகளின் கல்வியிலும் தொடர்கிறது.,

     கல்வி என்பது அறிவுசார்ந்த விசயம்., அதில் அவர்கள் மேம்பட வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து யாருக்கும் இல்லையென்ற போதிலும் கல்வித்திறனை மட்டும் அடிப்படையாக வைத்து பிள்ளைகளின் அன்பு தீர்மானிக்கப்படுவதுதான் வருத்தமானது., ஒரு டியுசன் டீச்சருக்கு இருக்கும் அக்கறைக்கூட சிலசமயம் பெற்றோர்களுக்கு அவர்களது பிள்ளைகள் மீது இல்லாதது வேதனையான ஆச்சரியமே!!!

    சிந்தித்துப்பாருங்கள்.,  இன்று படிக்க வில்லையென்பதற்காக அவர்கள் மீது கோபமும் எரிச்சலும் வருத்தமும் அடையும் நாம்., அவர்கள் பிறக்காமல் நமக்கு பெற்றோர்களாகும் வாய்ப்பை ஏற்படுத்த விட்டால்..? இந்த சமூகத்தில், நம் மீதான விமர்சனம் எத்தகையது.,? குடும்ப சூழல், உறவின் முறை மத்தியில் நமக்கான பெயர் எப்படி இருக்கும்...? அந்நேரங்களில் நமக்கு கிடைக்கும் ஆலோசனைகளையும், அனுதாபங்களையும் விட நாம் அடையும் கோபமும் வருத்தமும் மிக அதிகம்.,

   நமக்கு இறை வழங்கிய மிகப்பெரும் அன்பளிப்பு குழந்தைகள்., அதற்காக நம் பிள்ளைகளுக்கு என்றும் நன்றி சொன்னது இல்லை.,  அதை நினைத்துக்கூட பார்த்ததும் கிடையாது, ஆக அதற்கு கைமாறாக அவர்களை ஒழுக்கசீலர்களாக சமுக பயன்பாட்டிற்கு உகந்தவர்களாக, மனித நேயமிக்கவர்களாக பொது நலம் பேணுபவர்களாக உருவாக்க வேண்டியது நமது கடமை. அதற்கு அவர்களின் கல்வியெனும் அறிவு மட்டும் அளவுகோல் அல்ல!


" நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்பாளிகளே..நிச்சயமாக உங்களது பொறுப்புக்கள் குறித்து மறுமையில் விசாரிக்கப்படுவீர்கள்.."
                                                                                       -தூதர் மொழி
Title: Re: அறிவில் இல்லை அன்பின் அளவுகோல்..!
Post by: Global Angel on November 13, 2011, 05:20:03 AM
naa 10 varusam kalichu oadichukuan  ::)
Title: Re: அறிவில் இல்லை அன்பின் அளவுகோல்..!
Post by: Yousuf on November 13, 2011, 11:06:03 AM
Nandri!
Title: Re: அறிவில் இல்லை அன்பின் அளவுகோல்..!
Post by: RemO on November 16, 2011, 05:55:49 PM
nala pathivu machi
intha kalathula kulanthai valarpu rompa mukiyam
athum padikalana kulanthaikala paduthura paadu irukey pavam


Title: Re: அறிவில் இல்லை அன்பின் அளவுகோல்..!
Post by: Yousuf on November 16, 2011, 06:23:35 PM
Nandri Remo Machi!