FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Arul on September 29, 2013, 07:15:32 PM

Title: இதயத்திற்கு ஏது வலி
Post by: Arul on September 29, 2013, 07:15:32 PM
எங்கு நோக்கினும் மாட மாளிகைகள்
ஆடம்பரத்தின் அதிகார வர்க்கத்தின் ஆர்ப்பாட்டங்கள்
விஞ்ஞானத்தின் முன்னேற்றத்தில் முடிந்து விட்ட
என் கனவுகள்
துள்ளி விளையாடிய பருவத்தில் மதிப்பெண் பெரும்
இயந்திரமாய் ஆக்கி விட்ட என் சமூகம்
கெளரவம் என்று மார்தட்டும் பெற்றோர்கள்
பணம் பிடிங்கி தின்னும் பேய்கள் என்னை
இயந்திரமாக மாற்றுவதில் காட்டிய முனைப்பில்
மனிதனாக மதிக்க மனமில்லை அவர்களுக்கு
மாறிவிட்டேன் இயந்திரமாய்
எனக்குள் பாசமில்லை பந்தமில்லை அன்புமில்லை
அனைத்தையும் அழித்துவிட்டு பணம் என்னும்
பேயை என் மனதில் பதிய வைத்து உருவாக்கியது
என் கல்வி முறை
நானும் பணம் பெருக்கும் இயந்திரமாய்
மாறி விட்டடேன் இப்பொழுது
உள்நாடு வேண்டாமென்று வெளி நாட்டில்
வேலை வாய்ப்பு பெற்றோர்கள் விருப்பப்படி
அதுவும் அவர்கள் கெளரவத்தின் வெளிப்பாடு தான்
பயணப்பட்டேன் எல்லாம் விட்டு
அவ்வப்போது தொடர்பு கொள்ளும் தொலை பேசி
உரையாடல்கள் எங்கள் உறவுகளின் ஞாபகமாய்
உடல் நிலையின் பாதிப்பில்  உடனே வந்துவிடு
என்று அம்மாவின் அழு குரல்கள்
என்னை எதுவும் செயவில்லை
காய்ந்த மரமாக நான் இருந்தேன்
இறந்துவிட்ட  செய்தி என் செவிக்கு எட்டியது
அப்பொழுதும் கலங்கவில்லை என் மனது
விடுமுறையும் எனக்கில்லை
விடாமல் தொல்லை வேண்டாம்
விருப்பம் போல் செய்யுங்கள் என்றேன்

உருவாக்கம் உங்களது தானே
சிறு வயதே மரணித்துவிட்ட என் இதயத்திற்கு ஏது வலி
என் மீது எதற்கு பழி………..
Title: Re: இதயத்திற்கு ஏது வலி
Post by: Yousuf on September 29, 2013, 07:23:56 PM
மிக மிக உண்மையான ஒன்று அருள். என்னுடைய வாழ்க்கையையும் அப்படியே படம் பிடித்து சொன்னதை போன்று இருந்தது. பணம் ஈட்ட சொல்லி கொடுக்கும் கல்வி முறை ஒழுக்கத்தை, அன்பை, சொல்லி கொடுக்க தவறி விட்டது. பணத்தை மட்டுமே குறிக்கோளாக கொண்ட கல்வி நிலையங்கள் , கற்கும் மாணக்கர்கள் என்று மனித நேயத்தை கற்பிக்க தவறிவிட்ட கல்விநிளையங்களாக மாறி விட்டது வருந்த தக்கதே.

நல்ல கவிதை அருள் தொடரட்டும் உங்கள் சிந்தனையை தூண்டும் கவிதைகள்!

வாழ்த்துக்கள்!
Title: Re: இதயத்திற்கு ஏது வலி
Post by: Arul on September 29, 2013, 07:58:03 PM
மிக்க நன்றி Yousuf

இன்றைய கல்வி முறை இதை தான் போதிக்கிறது பெற்றோர்களும் இதற்கு உடந்தையாக இருகின்றனர் என்பது தான் மிக வேதனை ...................காலம் என்றாவது ஒரு நாள் இதற்கு பதில் சொல்லும் காத்திருப்போம் விடியலுக்கு ........
Title: Re: இதயத்திற்கு ஏது வலி
Post by: micro diary on September 29, 2013, 09:43:15 PM
உருவாக்கம் உங்களது தானே
சிறு வயதே மரணித்துவிட்ட என் இதயத்திற்கு ஏது வலி
என் மீது எதற்கு பழி………..

arumaiya varigal arul finsihing superb ithayam marithu vita piragu vali yethu nijame inum ezhutha vazhthukal
Title: Re: இதயத்திற்கு ஏது வலி
Post by: kanmani on September 29, 2013, 09:48:39 PM
idha kavidhai varigala padikumpodhu en manakan munae en paiyan dhaan thondrugiraan.. idha otapandhaaythula en maganum jeikanumae- endra yekkala dhaan petrorum thangal pasangala kuthiraiku kadivalam kativita pola pandhaiya kuthiraiya odavaikaranga.. odikalacha pinbu thirumbi partha vetripathai theriyadhu paasangalaiyum sonthangalaiyum tholaitha vetrupaathaiya dhaan irukum
enbathai thelivupaduthirukeenga arul .. nandri
Title: Re: இதயத்திற்கு ஏது வலி
Post by: Yousuf on September 29, 2013, 10:31:32 PM
கல்வி முறை மட்டும் அல்ல ஆட்சி முறையும் மாறும் என்ற எதிர் பார்ப்பில் தான் நானும் உள்ளேன் அருள்.

நான் உயிரோடு இருக்கும்போது நடக்க விட்டாலும் நிச்சயம் ஒரு நாள் நடக்கும்!

நன்றி!
Title: Re: இதயத்திற்கு ஏது வலி
Post by: Arul on September 30, 2013, 07:41:41 AM
mikka nandri Micro.............
Title: Re: இதயத்திற்கு ஏது வலி
Post by: Arul on September 30, 2013, 07:44:39 AM
mikka nandri Kanmani.............

எதிர் காலத்தை கண்டு பயப்பட வேண்டிய சூழலில் தான் நம் கல்வி இருகிறது எச்சரிக்கையுடன் குழந்தைகளை பாதுகாப்பது பெற்றோர்களின் கடமையே.......
Title: Re: இதயத்திற்கு ஏது வலி
Post by: Arul on September 30, 2013, 07:49:23 AM
Yousuf நீங்கள் சொல்வது உண்மை தான்

ஆட்சி முறை மாறினாலே நிச்சயம் மாற்றம் பிறக்கும் ......................எதிர் பார்ப்போம் அந்த நாளுக்கு
Title: Re: இதயத்திற்கு ஏது வலி
Post by: PiNkY on October 03, 2013, 09:50:53 PM
super lines arul.. Naam valarkapadum vitham than nam unarvugalai theermanikirathu.. Panthirkaaga nam indru eyanthiramai vaalbathai miga arumayana kavithai varigalai korthu eluthi irkeenga..
Title: Re: இதயத்திற்கு ஏது வலி
Post by: Arul on October 04, 2013, 09:08:10 AM
mikka nandri Pinky ............