FTC Forum

Special Category => இன்றைய ராசிபலன் => Topic started by: kanmani on September 28, 2013, 10:59:46 PM

Title: இன்றைய ராசி பலன்கள் - 28/09/2013 (28th sep)
Post by: kanmani on September 28, 2013, 10:59:46 PM
இன்றைய ராசி பலன்கள் - 28/09/2013


மேஷம்: குடும்பத்தில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். சொத்து பிரச்னைக்கு நல்ல தீர்வு கிடைக்கும். உறவினர்கள் எதிர்பார்ப்புடன் பேசுவார்கள். வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட் களை தேடுவீர்கள். உத்யோகத்தில் தலை மைக்கு நெருக்கமாவீர்கள். நினைத்ததை முடிக்கும் நாள்.


ரிஷபம்: கணவன்-மனைவிக் குள் நெருக்கம் உண்டாகும். காணாமல் போன முக்கிய ஆவணம் கிடைக்கும். உடல் நலம் சீராகும். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு. உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப் பார்கள். மனநிறைவு கிட்டும் நாள்.


மிதுனம்: ராசிக்குள் சந்திரன்தொடர்வதால் உங்களை அறியாமலேயே ஒருவிதபடபடப்பு, தாழ்வுமனப் பான்மை வந்து செல்லும். தன்னம்பிக்கை குறையும். வியாபாரத்தில் எதிர்பார்த்த பணம் தாமதமாக வரும். உத்யோகத்தில் கூடுதலாக வேலைப் பார்க்க வேண்டி வரும். வளைந்துக் கொடுக்க வேண்டிய நாள்.


கடகம்: குடும்பத்தினருடன் வீண் வாக்குவாதம் வந்துப் போகும். வெளிவட்டாரத்தில் அலைச்சல் அதிகரிக்கும். விலை உயர்ந்தப் பொருட் களை கவனமாக கையாளுங்கள். சகோதர வகையில் பிணக்குகள் வரும். உத்யோகத்தில் சக ஊழியர்களை அனுசரித்துப் போங்கள். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.


சிம்மம்: புதிய பாதையில் பயணிக்கத் தொடங்குவீர்கள். பிள்ளைகளால் உறவினர், நண்பர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக் கொடுப்பீர்கள். புது நட்பு மலரும். வியாபாரத்தில் ஆர்வம் பிறக்கும். உத்யோகத்தில் உயரதிகாரிகள் உங்களை மதித்துப் பேசுவார்கள். இனிமையான நாள். 


கன்னி: சாதிக்க வேண்டு மென்ற எண்ணம் வரும். உடன் பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். உங்களால் மற்றவர்கள் ஆதாயமடைவார்கள். வியாபாரத்தில் சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்யோ கத்தில் மூத்த அதிகாரிகள் முக்கிய அறிவுரைகள் தருவார்கள். முயற்சிகள் பலிதமாகும் நாள்.


துலாம்: குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். எதிர்பாராத இடத் திலிருந்து உதவிகள் கிடைக் கும். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். எதிர் பாராத நன்மைகள் உண்டாகும் நாள்.


விருச்சிகம்: சந்திராஷ்டமம் இருப்பதால் நினைத்த வேகத்தில் சில வேலைகளை முடிக்க முடியாமல் தடை, தாமதங்கள் ஏற்படும். சிலர் உங்களிடம் நயமாகப் பேசினாலும் சொந்த விஷயங்களை பகிர்ந்துக் கொள்ள வேண்டாம். வியாபாரத்தில் அலைச்சல் இருக்கும். உத்யோகத்தில் அதிகாரிகளுடன் ஈகோ பிரச்னை வந்து நீங்கும். பொறுப்புணர்ந்து செயல்பட வேண்டிய நாள்.


தனுசு: பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்றுக் கொள்வார்கள். மனைவிவழியில் ஆதரவு பெருகும். விலை உயர்ந்த ஆடை, ஆபரணம் வாங்குவீர்கள். வாகனத்தை சரி செய்வீர்கள். வியாபாரத் தில் எதிர்பாராத தன லாபம் உண்டு. உத் யோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். திறமைகள் வெளிப்படும் நாள்.


மகரம்: குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்றுக் கொள்வார்கள். பிரபலங்களின் நட்பு கிடைக் கும். பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்யோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவால் நினைத்ததை முடிப்பீர்கள். தொட்டது துலங்கும் நாள்.


கும்பம்: புதிய முயற்சிகள் யாவும் வெற்றியடையும். பிள்ளைகளால் மகிழ்ச்சியும், நட்பால் ஆதாயமும் உண்டாகும். ஆடம்பரச் செலவுகளை குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். உத்யோகத்தில் அதிகாரிகளுடன் இணக்கமான சூழ்நிலை உருவாகும். கனவு நனவாகும் நாள்.


மீனம்: தடைகளை கண்டு தளரமாட்டீர்கள். தாய்வழி உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். பழைய கடனைத் தீர்க்க புதிய வழியில் யோசிப்பீர்கள். மனதிற்கு பிடித்தவர்களை சந்திப்பீர்கள். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.