(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fi41.tinypic.com%2Fmsgikw.jpg&hash=1272a3c9a5f04a10da7b0473c6ea1ca49250ecda)
வன்னி மண்
தினந்தோறும் நான் ரசித்த இயற்கை இது.
மண்ணின் வாசனையோ தனி.
வீசும் காற்று கூட என் மண்ணின்
மகத்துவம் உரைத்திடும். எழில் மிகு
தேவாலயங்கள். கொஞ்சி விளையாடிடும்
சின்னஞ்சிறு சிட்டு குருவிகள்.
ஆற்றங்கரையிலே தூக்கணாம் குருவி
கூடுகள். காலையில் கூவிடும் குயில்களின்
கூட்டம். பச்சை மாமரங்களின் கிளைகளில்
மறைந்து உலவும் கிளிகனின் கி கி
சத்தமும். மரங்களை குலவிடும் மரங்கொத்தி
பறவையின் அழகும். மலர்களை தேன்கள்
நுகர்திடும் தேனீக்களின் கூட்டமும்.
வண்ணசிறகினை கொண்ட
வண்ணத்துபூச்சிகளின் அழகும். வேஞ்சுடு
வெயிலினில் ஏர் பிடித்து போகும்
உழவனின் நிழலும் ஆஹா வர்ணனனை
செய்யவே முடியாமல் என்னையும்
அழைத்திடும்
என் மண்ணின் இயற்கையின் ஒரு பாகம் தான் இது...