FTC Forum

Special Category => மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty => Topic started by: MysteRy on September 27, 2013, 01:54:49 PM

Title: ~ இடுப்பு மற்றும் வயிற்றுக்கான எளிய பயிற்சி ~
Post by: MysteRy on September 27, 2013, 01:54:49 PM
இடுப்பு மற்றும் வயிற்றுக்கான எளிய பயிற்சி

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fmmimages.maalaimalar.com%2FArticles%2F2013%2FSep%2F6b37a8d7-5085-4499-99c9-aaa461d9e4b1_S_secvpf.gif&hash=2123e6297c2836c7bb1d860bd5f178d80e4ab8ec)


வீட்டில் இருக்கும் பெண்கள் உடல் எடை அதிகரிப்பால் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள். அதற்கு முக்கிய காரணம் உடற்பயிற்சி இல்லாதது, அதிக நேரம் தூங்குவது, அதிக அளவில் சாப்பிடுவது போன்றவை தான். இதனால் இடுப்பு, வயிற்றில் அதிகப்படியான சதை போடுவதை காணலாம். இந்த பிரச்சனை தீர எளிய உடற்பயிற்சி உள்ளது.

அதற்கு முதலில் விரிப்பில் நேராக நின்று கொள்ளவும். டம்ப்பெல்ஸ் ( dumbbells ) எடுத்து கொள்ளவும். ஆரம்பத்தில் குறைந்த எடையுள்ள டம்ப்பெல்ஸ் ( dumbbells ) பயன்படுத்தவும். டம்ப்பெல்ஸ் இல்லாதவர்கள் வாட்டர் பாட்டிலில் தண்ணீர் நிரப்பியும் பயன்படுத்தலாம்.

விரிப்பில் சிறிது இடைவெளி விட்டு நேராக நின்று கொண்டு வலது கையால் டம்ப்பெல்ஸ் பிடித்து கொண்டு வலது தோள்பட்டையில் வைக்கவும். இடது கை கீழே இருக்க வேண்டும். பின்னர் வலது காலை இரண்டடி முன்வைத்து முட்டி வரை மடக்கி, இடது காலை பின்புறமாக பின்புறமாக நீட்டி முன்கால் பாதம் தரையில் ஊன்றி ( படத்தில் உள்ளபடி) நிற்கவும்.

இந்த நிலையில் சிலவிநாடிகள் இருந்த பின்னர் பழைய நிலைக்கு வரவும். அடுத்து கால்களை மாற்றி இடது பக்கம் செய்யவும். இது தான் ஒரு செட். இந்த பயிற்சியை தொடர்ந்து 20 முதல் 30 எண்ணிக்கையில் செய்யவும்.இந்த பயிற்சியை தொடர்ந்து 3 மாதம் செய்து வந்தால் வயிறு மற்றும் இடுப்பு பகுதியில் உள்ள சதை படிப்படியாக குறைவதை பார்க்கலாம்.உடலில் உள்ள கலோரிகள் குறைய இந்த பயிற்சி மிகவும் சிறந்தது.