FTC Forum

Technical Corner => கணினி மற்றும் தொழில்நுட்ப செய்திகள் - Computer & Technical Informations => Topic started by: MysteRy on September 27, 2013, 01:48:19 PM

Title: ~ பேஸ்புக்கில் புதிய வசதி – ஷேர் செய்த பிறகு Statusஐ எடிட் செய்யலாம் ~
Post by: MysteRy on September 27, 2013, 01:48:19 PM
பேஸ்புக்கில் புதிய வசதி – ஷேர் செய்த பிறகு Statusஐ எடிட் செய்யலாம்


பேஸ்புக் தளம் அவ்வப்போது புதிய வசதிகளை வெளியிட்டு சமூக வலைதளங்களில் தான் எப்போதும் ராஜா என்பதை நிரூபித்து வருகிறது. அவ்வகையில் சமீபத்தில் வந்துள்ள புதிய வசதி நாம் பகிர்ந்த Status களை Edit செய்யும் வசதி.  இதன் மூலம் நாம் ஒரு Status – இல் ஏதேனும் எழுத்துப் பிழை செய்திருந்தால் அதை சரி செய்து கொள்ளலாம்.

இதை செய்ய நீங்கள் ஏற்கனவே பகிர்ந்த Status ஒன்றிற்கு செல்லுங்கள். அதில் வலது மூலையில் உள்ள Options Icon ஐ கிளிக் செய்யுங்கள். அதில் Edit ஒன்று ஒரு புதிய வசதி வந்திருக்கும்.

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fkarpom.com%2Fwp-content%2Fuploads%2F2013%2F09%2FStatus-Edit.-option.jpg&hash=1e2fd3f798cf484b9f905e9a135ff4b3c64eaa82)

இப்போது மாற்றம் செய்யும் வசதி வரும். தேவையான மாற்றத்தை செய்யுங்கள். பின்னர் Done Editing என்பதை கிளிக் செய்யுங்கள்.

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fkarpom.com%2Fwp-content%2Fuploads%2F2013%2F09%2Ffb-done-editing.jpg&hash=fa7514c7a9b7505a61b2e30d6465e76ddc2e4725)

அவ்வளவு  தான் உங்கள் Status எடிட் செய்யப்பட்டு விட்டது. ஆனால் இதை வைத்து ஏதும் ஏமாற்றும் வேலைகளை நீங்கள் செய்ய முடியாது. காரணம் Edit செய்து முடித்தவுடன் Done Editing என்று வந்து விடும். இதனால் நீங்கள் எப்போது, என்ன மாற்றம் செய்தீர்கள் என்று எல்லாமே வந்து விடும். யாரெல்லாம் போஸ்டை பார்க்க முடியுமோ அவர்களால் நீங்கள் எடிட் செய்ததையும் பார்க்க முடியும்.

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fkarpom.com%2Fwp-content%2Fuploads%2F2013%2F09%2Fedit-history.jpg&hash=4dc609ad366ba5cadd1198ba2ca7346fd54d1e24)

ஏதேனும் தவறாக எழுதி இருப்பின் இதை பயன்படுத்தி மாற்றம் செய்யலாம். இது நிறைய பேருக்கும் பயன்படும் வசதியாக இருக்கும்.

Facebook Android App-ஐ பயன்படுத்துபவர்களுக்கும் இந்த வசதி அறிமுகம் ஆகியுள்ளது. iPhone பயனர்களுக்கு விரைவில் இந்த வசதி கிடைக்கும்.