FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: micro diary on September 26, 2013, 11:02:39 PM
-
உன்னை ஒவ்வொரு
நொடியும் பார்க்க
தவித்த என் விழிகள்
என்ன பாவம் செய்தது
விழி இருந்தும்
குருடியாய் மாறி போனது
நீ பேசும் வார்த்தைகளை
சேகரிப்பதே தன் கடமையாக
கொண்ட என் செவி
செவி இருந்தும் செவிடாய் மாறிப்போனது
உன் பெயரை உச்சரிக்கவே
பேச கற்று கொண்டதாய்
கர்வம் கொண்ட என்
இதழ்கள்
வாய் இருந்தும் ஊமையாய் மாறிப்போனது
உன்னை பற்றி கவி
எழுதவே என் விரல் உருவானதாய்
விரல் இருந்தும் முடமாகி போனது
உனக்காக மட்டுமே
உன்னை நினைத்து மட்டுமே
துடித்து கொண்டிருந்த
என் இதயம்
அதன் துடிப்பை மறந்து
இறந்து கொண்டிருக்கிறது
நீ வருகிறேன்
என்று சொல்லி
வரமால் போனதால்
-
செவி இருந்தும் செவிடாய் மாறிப்போனது
உன் பெயரை உச்சரிக்கவே
பேச கற்று கொண்டதாய்
கர்வம் கொண்ட என்
இதழ்கள்
வாய் இருந்தும் ஊமையாய் மாறிப்போனது
உன்னை பற்றி கவி
எழுதவே என் விரல் உருவானதாய்
விரல் இருந்தும் முடமாகி போனது
உனக்காக மட்டுமே
உன்னை நினைத்து மட்டுமே
nice lines micro
-
Nice line micro!!!!