FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Arul on September 26, 2013, 05:34:26 PM

Title: பொய்மை
Post by: Arul on September 26, 2013, 05:34:26 PM
உண்மை என்று சொன்னாலே
கசக்கிறது உலகிற்கே
பொய்மை முகம் முன்னின்று
வேசமிட்டு காட்டுவதை அழகென்று
அழைப்பவர்கள் ஆயிரம் பேர் இங்கு உண்டு
யாரை சொல்லி என்ன பயன்
படைத்தவனே பொய் உருவத்தில்
பவனி வருகிறான் பல்லக்கில்
படைக்கப் பட்டவன் அவனுக்கே
மாலை இடுகிறான்
வார்த்தைகளின் ஜாலத்தில்
மயங்காதவர் எவரும் உண்டோ
பொய்மையில் வார்த்தையில் மயக்கம் தான்
உண்மைக்கு என்றுமே தயக்கம் தான்
இந்த மானிட ஜென்மத்தில்....................