FTC Forum

தமிழ்ப் பூங்கா => இங்கு ஒரு தகவல் => Topic started by: kanmani on September 26, 2013, 09:55:07 AM

Title: பயன் அறிந்து சாப்பிடுவோம்: கத்தரிக்காய்
Post by: kanmani on September 26, 2013, 09:55:07 AM
இயற்கை நமக்கு அளித்திருக்கும் கொடைகளில் ஒன்று காய்கறிகள். தினமும் நாம் சமைப்பதற்கு காய்கறிகளை பயன்படுத்துகிறோம். அந்த  காய்கறிகளில் என்ன சத்துகள் இருக்கின்றது என்பதை நாம் தெரிந்து சாப்பிடுகிறோமா என்றால் இல்லை, எத்தனை பேருக்கு தெரியும் நாம் சாப்பிடும்  காய்கறியில் என்ன சத்துகள் இருக்கிறது என்று.... கேரட், கறிவேப்பிலை கண்களுக்கு உகந்தது என பொதுவாக நாம் அறிந்திருப்போம். நாம் சாப்பிடும்  காய்கறிகளின் பயன்கள் மற்றும் சத்துகளை அறிந்து சாப்பிட்டலாமே. காய்கறிகளில் நாம் முதலில் பார்க்கவிருப்பது கத்தரிக்காய்.

கத்தரிக்காய்

என்ன சத்துகள் இருக்கு: தினமும் கத்தரிக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் சத்துகள். பொதுவாக கத்தரிக்காயில் வைட்டமின் சி மற்றும் இரும்புச்சத்து  இருக்கிறதை தெரிந்துகொள்ள வேண்டும்.. மேலும் ஃபைபர் 11%, மாங்கனீசு 10%, பொட்டாசியம் 5.3%,  ஃபோலேட் 4.5%, வைட்டமின் கே 3.5%,  செம்பு 3.5%, வைட்டமின் பி 63.5%, டிரிப்தோபன் 3.1%, வைட்டமின் சி 3%, மெக்னீசியம் 2.8%,  வைட்டமின் பி 32.6%, கலோரி 1%.

யாருக்கு நல்லது : ஆஸ்துமா நோயாளிகள் கத்தரிக்காயை மிளகு, சீரகம், பூண்டு சேர்த்து சாப்பிடலாம். மேலும் உடல் சூட்டை தக்க வைத்துக்கொள்ள  விரும்புபவர்களும் இவ்வாறு சாப்பிடலாம்.

யாருக்கு நல்லதல்ல: சரும நோயாளிகள், புண், அலர்ஜி உள்ளவர்கள் சாப்பிடக்கூடாது. மேலும் இவற்றை சாப்பிட்டால் அலர்ஜி அதிகப்படும், மேலும்  அரிப்பை தூண்டும்.. அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள் முதல் மூன்று மாதங்களுக்கு சாப்பிடக்கூடாது.

பலன்கள்: கத்தரிக்காய் பெருங்குடல் புற்றுநோயிலிருந்து பாதுகாக்கும். மேலும் நீரிழிவை கட்டுப்படுத்த கத்தரிக்காயை பயன்படுத்துகின்றனர்.  நரம்புகளுக்கு வலுவூட்டும். சளி, இருமலை குறைக்கும். கொழுப்பின் அளவை கட்டுபடுத்தி இதயத்திற்கு பாதுகாப்பு அளிக்கும், ரத்த அழுத்தத்தை  குறைக்கும். நீல நிற கத்தரிக்காய் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.