-
பாரதியாரின் நற்சிந்தனைகள்:
(https://fbcdn-sphotos-f-a.akamaihd.net/hphotos-ak-ash4/1001132_578869135496753_1705089672_n.jpg)
* எந்த தொழிலையும் நேர்த்தியாகவும், நியாயமாகவும் செய்து பொருள் தேடுபவர்கள் மேன்மக்கள்.
* உள்ளத்திலே நேர்மையும் தைரியமும் இருந்தால் வாழ்வும் நேரான பாதையில் சென்று கொண்டிருக்கும்.
* நம்முடைய இஷ்டப்படி உலகில் ஒன்றும் நடப்பது இல்லை. எல்லாம் தெய்வத்தின் இஷ்டப்படி தான் நடக்கிறது.
* கடவுளுக்கு எல்லாம் ஒன்றே. எத்தனை கோடி உயிர்கள் உலகில் வாழ்ந்தாலும் சரி மடிந்தாலும் சரி கடவுளுக்கு எந்தவொரு பேதமும் இல்லை.
* கடவுளை நம்பினோர் கைவிடப்படார் என்ற உறுதி உள்ளத்தில் நிலைத்திருக்க வேண்டும். அது தான் உண்மையான பக்தி.
* மனிதன் அரைநிமிஷம் கூட சும்மா இருப்பது கூடாது. ஏதாவது பயனுள்ள வேலையில் ஈடுபட்டுக் கொண்டே இருக்கவேண்டும்.
* எதை விரும்புகிறோமோ அதுவே நமக்கு கிடைக்கிறது. எதை ஆதரிக்கிறோமோ அதுவே வளர்ச்சி பெறுகிறது.
-
இப்ராஹீம் நபியின் பத்து கட்டளைகள்..
(https://fbcdn-sphotos-a-a.akamaihd.net/hphotos-ak-prn1/1016246_579641445419522_1026153646_n.jpg)
1. வீண் பேச்சு பேசாதீர்கள்.
2. நீதி, நேர்மையோடு வாழுங்கள்.
3. ஏழைகளை உயர்வாக மதியுங்கள்.
4. நேர் வழியில் உணவை தேடுங்கள்.
5. பாவங்களை தவிர்த்துக்கொள்ளுங்கள்.
6. பிறர் மனம் புண்படும் படி நடக்காதீர்கள்...
7. உறவினர்களை அரவணைத்துக்கொள்ளுங்கள்...
8. உங்களால் பிறருக்கு தொல்லை ஏற்பட்டிருப்பின் மன்னிப்பு கேளுங்கள்...
9. அநியாயம் செய்தோருக்கும் அருள் புரியுங்கள். தீமை செய்தோரை மன்னியுங்கள்...
10.உங்களின் பொன்னான நேரங்களை பொருளீட்டுவதிலும், தமது மனைவி, மக்கள், சமூகத்தாரின் கடமைகளை நிறைவேற்றுவதிலும் செலவிடுங்கள்...
-
வேதவரிகளும் தூதர் மொழிகளும் நூலில் இருந்து...
(https://fbcdn-sphotos-c-a.akamaihd.net/hphotos-ak-ash3/998918_595569103826756_184391865_n.jpg) (http://www.friendstamilchat.com)
* இறைவன் அனைவருக்கும் நெருக்கமானவன். எவர் பரிந்துரையுமின்றி அவனை நேராக நெருங்க முடியும். அவனிடம் உதவி கோர முடியும்.
* எவர் தன் இறைவனின் சந்திப்பை எதிர்பார்த்தவராய் இருக்கின்றாரோ, அவர் நற்செயல்புரியட்டும். அடிபணிவதில் தன் இறைவனுடன் யாரையும் இணை வைக்காதிருக்கட்டும்.
* உங்கள் மீதும் நோன்பு கடமையாக்கப்பட்டிருக்கின்றது (அதன் மூலம்) நீங்கள் இறை அச்சமுடையவர்களாய்த் திகழக்கூடும்.
* இறைவழிபாடுகள் சடங்குகள் அல்ல, இறையச்சம், ஒழுக்கம் ஆகியவற்றை அடைவதற்கான பயிற்சிகளே அவை.
* சேமிப்பில் நிர்ணயிக்கப்பட்ட ஒரு பகுதியை தான தர்மமாக கட்டாயம் வழங்க வேண்டும். ""ஜகாத்'' என்று அழைக்கப்படும் இக்கடமை தொழுகைக்கு அடுத்த கடமையாகும்.
* எங்கள் இறைவனே! நிச்சயமாக நீ தான் எல்லாவற்றையும் செவியேற்பவனாகவும், நன்கறிபவனாகவும் இருக்கின்றாய். உனக்கே நாங்கள் அடிபணிகிறோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவி கேட்கிறோம்.
-
அறிஞர்களின் சிந்தனைகள் :
(https://fbcdn-sphotos-f-a.akamaihd.net/hphotos-ak-frc1/1002191_605861179464215_1473679241_n.jpg) (http://www.friendstamilchat.com)
1. பகைவனின் புன்சிரிப்பை விட நண்பனின் கோபம் மேலானது.
- ஜேம்ஸ் ஹோபெல்
2. நல்ல யோசனை தோன்றும்போது அதை உடனே செய்து முடியுங்கள்; வெற்றி உங்கள் பக்கம்! - ஸ்டோன்
3. எந்தத் தொழிலும் இழிவில்லை. தொழில் எதுவும் செய்யாதிருப்பதுதான் இழிவு. - டால்ஸ்டாய்
4. தன் கால்களால் பறவைகள் வலையில் சிக்கிக் கொள்ளும்; தன் நாவால் மனிதன் துன்பத்தில் சிக்கிக்கொள்வான். - தாமஸ் புல்லர்
5. யாரிடம் உன் எண்ணங்களை
வெளிப்படையாகச் சொல்லமுடியுமோ, அவனே உன் உண்மையான நண்பன்.
- எமர்சன்
6. அன்னையின் இதயமே
குழந்தையின் பள்ளிக்கூடம். - டீச்சர்
7. தன்னந்தனியே எவனொருவன் நிற்கத் துணிகிறானோ, அவனே உலகில் வலிமைமிக்க மனிதன். - மாத்யூஸ்
8. பொறுமை இல்லாதவர்கள் நீதிமான்களாக இருக்க
முடியாது. - மார்க்ஸ்
9. அளவில்லாத சோதனைகளைத் தாங்கி சாதனை படைக்கிறவன்தான்மேதை. - ஹோம்கின்ஸ்
10. உயர்ந்த எண்ணங்களை உடையோர் ஒருநாளும் துன்பம் அடையார்.
-
சில நல்ல சிந்தனைகள் ::
(https://fbcdn-sphotos-b-a.akamaihd.net/hphotos-ak-ash4/1230037_616073605109639_535977533_n.jpg) (http://www.friendstamilchat.com)
o மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு
o பகுத்தறிவு என்பது மனிதனுக்கு உயிர்நாடி
o மூடநம்பிக்கையும் குருட்டுப் பழக்கமும் சமூகத்தின் முதல் பகைவன்.
o விதியை நம்பி மதியை இழக்காதே.
o மக்களின் ஒழுக்கத்தையும் மதியையும் கெடுப்பது மது.
o மனிதப் பண்பை வளர்ப்பதே என் வாழ்நாள் பணி.
o பிறருக்கு தொல்லை தராத வாழ்வே ஒழுக்க வாழ்வு.
o பக்தி என்பது தனிச் சொத்து. ஒழுக்கம் என்பது பொது சொத்து.
o பக்தி இல்லாவிட்டால் இழ்ப்பில்லை. ஒழுக்கம் இல்லாவிட்டால் பாழ்.
o தீண்டாமை ஒழிய வேண்டுமானால், சாதி ஒழிய வேண்டும்.
o கல்வி அறிவும், சுயமரியாதை எண்ணமும்,
பகுத்தறிவுத் தன்மையுமே தாழ்ந்து கிடக்கும் மக்களை உயர்த்தும்.
o பொதுவாழ்வில் இருப்பவர்களுக்கு அளவுக்கு மீறிய நாணயமும், கட்டுப்பாடும், உறுதியும், தியாக உணர்வும் வேண்டும்.
o ஒரு நாடு சுபிட்சத்துடன் வாழ வேண்டுமானால், அந்நாட்டு மக்கள் ஒழுக்கமுள்ளவர்களாக இருத்தல் அவசியம்.
o ஒழுக்கக் குறைவுக்கும் மூடநம்பிக்கைக்கும் எப்படிப்பட்ட கலையும் பயன்பட்டு விடக்கூடாது.
o வாழ்க்கை அவனவன் வாழ்வதற்கு என்று மட்டும் கருதக் கூடாது மற்றவர்கள் நலனுக்கும் என்று கருத வேண்டும்.
o ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.
o என்னைப் பொறுத்தமட்டில், நான் ஒழுக்கத்துடன் நடந்தால், உண்மையை ஒழிக்காமல் எதையும் நேர்மையுடன் கடைப்பிடித்தால், அதற்கு தனிசக்தி உண்டு என்பதை நம்புகிறவன்.
o எனது சீர்திருத்தம் என்பதெல்லாம் பகுத்தறிவை கொண்டு ஆராச்சி செய்து, சரியென்று பட்டபடி நட என்பதேயாகும்.
o மற்றவர்களிடம் பழகும் வித்தையும் ஒழுக்கத்தையும் சிறு வயதிலேயே நன்றாக ஒருவன் கற்றுக் கொண்டானானால் அவனே வாழ்க்கையில் பெரிய மனிதன் ஆவான்.
Thanks நீதி கதைகள்,தன்னம்பிக்கை கதைகள்.
-
மலர் போன்ற நல்ல சிந்தனைகள்..
(https://fbcdn-sphotos-g-a.akamaihd.net/hphotos-ak-ash3/1229894_618999014817098_1342101526_n.jpg)
1.வேகமாக ஓங்கி வளரும் பனைமரம் ஒருவனுக்கு நிழலைத் தரமுடியாது. நிதானமாக செழித்துவளரும் ஆலமரமோ அரசனது படை பரிவாரங்களுக்கும் இடம் தரும். வேகமிருந்தால் போதாது. விவேகமும் தேவை.நிதானமான வளர்ச்சி நிலையான புகழைத் தரும்.
2.உடலை சுத்தமாக வைத்திருப்பவனிடம் நோய் அண்டாது. உள்ளம் சுத்தமாக இருப்பவனிடம் தீமை அண்டாது.
3.மீனுக்கு பலம் நீரினிலே குளவிக்கு பலம் அதன் கொடுக்கினிலே மனிதனுக்கு பலம் அவன் மூளையிலே மனிதனின் பலவீனம் அவன் நாக்கினிலே!
4.தோண்டதோண்ட நீர் சுரக்கும். முயல முயலவே வெற்றி கிடைக்கும்.வெட்டுப்பட்ட மரமும் துளிர்க்கும் குட்டுப்பட்ட நீயும் நிமிர்வாய் நம்பு.
5.மையில்லா எழுதுகோலால் எழுத முடியாது. தூய்மையில்லா மனிதனிடத்தில் நம்பி பழகுதல் கூடாது.
6.மேகமானது வானில் ஒளிவீசும் சூரியனைக் கூட சில நிமிடங்கள் தன் முயற்சியால் மறைத்துவிடுகிறது.அதுபோல விடாமுயற்சி இருப்பின் அடைய முடியாதது எதுவும் இல்லை.
7.தண்ணீர் ஊற்றியவனின் தாகம் தீர்க்கும் தென்னை போல உனக்கு உதவியவனுக்கு சமயத்தில் உதவுவது உன் கடமை.
8.ஒர் அறையின் மையத்தில் ஏற்றிவைக்கப்படும் ஊதுபத்தி அறையைமட்டுமின்றி அதனையும் தாண்டி தன் வாசனையை பரப்புவது போல நாம் கற்கும் கல்வி நமக்கு மட்டுமின்றி நாட்டு மக்கள் அனைவருக்கும் பயனளிப்பதாய் இருக்கவேண்டும்.
9.கற்றறியா மரம் கூட மற்றவர்களுக்கு பயனைத்தறுகிறது நிழலாக உணவாக உறைவிடமாக கற்றறிந்த மூடர் நாம் அதை வெட்டலாமோ? சிந்திப்போம் சந்திகள் தோறும் சாலைகள் ஒரம் மரம் வளர்ப்போம்
10.கொழுத்த மீனுக்கு காத்திருக்கும் கொக்கைப்போல உன் இலக்கிற்கு கவனம் சிதறாமல் காத்திரு. காலம் கட்டாயம் கனியும்.