புதினா மசாலா சப்பாத்தி
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2F4.bp.blogspot.com%2F-sjNyjf6bauM%2FUgoUseAGraI%2FAAAAAAAANqQ%2Fv36UqT6If8M%2Fs1600%2F33333.gif&hash=b9e67501c029f9dad71038f6e2d4614c6a7a83da)
தேவையானவை:
கோதுமை மாவு – 2 கப்,
கொத்தமல்லி – 1 கட்டு
புதினா - 1 கட்டு
இஞ்சி – சிறு துண்டு
பூண்டு – 3 பல்,
பச்சை மிளகாய் – 2,
நெய் – சிறிதளவு,
எண்ணெய், உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
• புதினா, கொத்தமல்லியை நன்றாக கழுவி பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
• இஞ்சியை தோல் சீவி கழுவி வைக்கவும்.
• புதினா, கொத்தமல்லி, இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், சிறிதளவு உப்பு ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும்
.• கோதுமை மாவுடன் அரைத்த விழுது, நெய், கொஞ்சம் உப்பு மற்றும் தேவையான தண்ணீர் சேர்த்து நன்கு தளர பிசைந்து அரை மணி நேரம் ஊற வைக்கவும்..
• மாவை சின்னச் சின்ன சப்பாத்திகளாக திரட்டி, தோசைக்கல்லில் போட்டு, சுற்றிலும் எண்ணெய் விட்டு, வேகவிட்டு எடுக்கவும்.