FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: micro diary on September 23, 2013, 01:01:53 PM

Title: அன்பின் கடவுளா நீ
Post by: micro diary on September 23, 2013, 01:01:53 PM
உடைந்து போன என்னை
உருவாக்க பார்க்கிறாய்

சிதறி போன என் இதயத்தை
சேர்த்திட பார்க்கிறாய்

வறண்டு போன
 என் வாழ்க்கையை
பசுமையாக்க பார்க்கிறாய்

தோற்று போன
என் அன்பை
வெற்றியாக்க பார்க்கிறாய்

ஊமையான என்
இதழை 
பேச வைக்க பார்க்கிறாய்

இருள் சூழ்ந்த
என்  விழிகளுக்கு
வெளிச்சத்தை  தர
பார்க்கிறாய்

மறித்து போன  எனக்கு
மறு பிறவி தர
பார்க்கிறாய்

அன்பின் கடவுளா நீ


Title: Re: அன்பின் கடவுளா நீ
Post by: Arul on September 23, 2013, 01:11:21 PM
anaithaiyum enaku koduththu vittu yeno
mounamai vedikkai parkirai


mika arumai micro ......................