பேக் வேர்ட் ஸ்ட்ரெச்சிங் பயிற்சி
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fmmimages.maalaimalar.com%2FArticles%2F2013%2FSep%2F7f8bea9d-b022-4106-b25e-a1b0d655e34f_S_secvpf.gif&hash=18f75d3f0a10e87da404e80420b4e7736df124d7)
சிலருக்கு பக்கவாட்டில் அதிகளவில் சதை இருக்கும். அப்படிப்பட்டவர்கள் இந்த உடற்பயிற்சியை தொடர்ந்து செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும். முதலில் விரிப்பில் இரண்டு கால்களையும் அகட்டி, (சிறிது இடைவெளி விட்டு) நிற்கவும்.
ஒரு பந்தை எடுத்துக் கொள்ளவும். கைகளால் பந்தை பிடித்து கொண்டு மார்பு பகுதியின் நடுவில் வைத்துக் கொள்ளவும். வலது புற இடுப்புப் பகுதி வரை பந்தைக் கொண்டு வந்து மெதுவாக குனிந்து வலது காலைத் தொட வேண்டும்.
இதே போல் இடது புறமும் திரும்பி இடது காலைத் தொடவும். ஆரம்பத்தில் இந்த பயிற்சியை 10 முதல் 20 முறை செய்ய வேண்டும். பின்னர் நன்றாக பழகிய பின்னர் 30 முதல் 40 முறை செய்யலாம்.
இந்த பயிற்சியை தொடர்ந்து 3 மாதம் செய்து வந்தால் நல்ல பலன் கிடைப்பதை காணலாம். இந்த பயிற்சி செய்வது மிகவும் எளிமையானது. மேலும் விரைவில் பலன் தரக்கூடியது.
பலன்கள்: பக்கவாட்டுத் தசைகள் சீராகும். நாட்பட்ட முதுகு வலி உள்ளவர்கள் தொடர்ந்து இந்தப் பயிற்சியைச் செய்யும்போது வலிகள் குறையும். தசைப் பிடிப்பு, மூச்சு பிடிப்பு போன்றவற்றில் இருந்து விடுபடலாம்