ஃப்ரன்ட் அண்ட் சைடு நீ அப்ஸ் பயிற்சி
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fmmimages.maalaimalar.com%2FArticles%2F2013%2FSep%2F525d0725-efc0-489f-8a91-ec8094b41f92_S_secvpf.gif&hash=994f667d08e2ebf12f845a5d883b30331017fc68)
தினமும் கால்களை வலுவுடன் வைத்திருக்க சில எளிய பயிற்சிகளைச் செய்யலாம். இந்தப் பயிற்சிகள் செய்வதற்கு முன்பு 'வார்ம் அப்' செய்துவிட்டு தொடங்கினால், 'கால்' மேல் பலன் கிடைக்கும். உடல் எடை அதிகரிக்கும் போது கால் வலி வருகிறது.
அப்படிப்பட்டவர்கள் கீழே உள்ள இந்த எளிய பயிற்சியை தொடர்ந்து செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும். இந்த பயிற்சி செய்ய முதலில் சுவரில் அருகே நேராக நிற்கவும். வலது கால் முட்டியை மடக்கி இடுப்பளவு மேலே உயர்த்திய பின், தரையைத் தொடாமல் காலை இறக்கவும்.
பிறகு, காலை அதே நிலையிலேயே பக்கவாட்டில் உயர்த்தவும். இதேபோல் இடது காலில் செய்யவும். ஒரு செட் 15 என்ற எண்ணிக்கையில் இரண்டு செட்கள் செய்யவும்.
பலன்கள்: தொடைகள் வலு பெறும். அடி வயிறு, கால் தசைகள் பலம் பெறும்.