ஃப்ரன்ட் அண்ட் சைடு லெக் ரைஸ்
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fmmimages.maalaimalar.com%2FArticles%2F2013%2FSep%2Fff19e90a-bfc8-428c-bb15-51d9a4a09163_S_secvpf.gif&hash=d35def3e30cc5cd62607336dd2fc19a673cc37f0)
சுவருக்கு அருகே நேராக நின்று கொள்ளவும். வலது கையை சுவரில் வைத்துக்கொண்ட இடது கையை இடுப்பில் வைக்கவும். இந்த நிலையில் இடது காலை முடிந்த வரை முன்னால் உயர்த்தவும்.
பின்பு பழைய நிலைக்கு வந்த பின் இடது பக்கம் உயர்த்தவும். இது போல் 15 முறை செய்தவுடன் இடது கையை சுவரிலும் வலது கையை இடுப்பிலும் மாற்றி வைத்து 15 முறை செய்ய வேண்டும். இது ஒரு செட். சில விநாடிகள் ரிலாக்ஸ் செய்த பின் மேலும் 2 செட்கள் செய்ய வேண்டும்.
பலன்கள் : இடுப்புத் தசைகள் வலுவடையும். கோர் மசில்ஸ் எனப்படும் வயிற்றைச் சுற்றியுள்ள அனைத்துத் தசைகளும் வலுப்பெறும். பெண்களுக்கு, அடி வயிற்றுப் பகுதிகள் வலுவடையும். கால்கள் வலுப்பெறும்.