FTC Forum

Special Category => மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty => Topic started by: MysteRy on September 19, 2013, 02:26:51 PM

Title: ~ கால்களுக்கான ஹீல் பயிற்சி ~
Post by: MysteRy on September 19, 2013, 02:26:51 PM
கால்களுக்கான ஹீல் பயிற்சி

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fmmimages.maalaimalar.com%2FArticles%2F2013%2FSep%2F40af8ef0-43a8-4891-8c1c-b359ade9013b_S_secvpf.gif&hash=2db67b881e2ea60137f473b12eb08bdcc238f12b)


தினமும் நடைப்பயிற்சி செய்ய முடியாதவர்கள் கூட கால்களை வலுவுடன் வைத்திருக்க சில எளிய பயிற்சிகளை செய்யலாம். இந்த பயிற்சிகள் செய்வதற்கு முன்பு வார்ம் அப் செய்துவிட்டு தொடங்கினால் கால் மேல் பலன் கிடைக்கும்.

கால்களை வலுவாக்கும் எளிய பயிற்சிகள் பல உள்ளன. அவற்றுள் இந்த பயிற்சி மிகவும் எளிமையானது மற்றும் விரைவில் பலன் தரக்கூடியது. இந்த பயிற்சி செய்ய முதலில் விரிப்பில் நேராக நின்று கைகளை இடுப்பில் வைத்துக் கொள்ளவும்.

முன் கால் விரல்களை தரையில் பதித்தபடி நின்று கொண்டு பின்னங்கால் பாதத்தை முடிந்தவரை உயர்த்தி பின் கீழ் இறக்கி தரையை தொடாமல் மீண்டும் உயர்த்தவும். இதுபோல் 20 எண்ணிக்கையில் இரண்டு செட்கள் செய்ய வேண்டும்.

இவ்வாறு இந்த பயிற்சியை தொடர்ந்து 3 மாதம் செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும். இந்த பயிற்சி செய்வதால் தண்டந்தசை வலுப்பெறும். முட்டி வலி, முதுகு வலி குணமாகும். உடலின் கீழ்ப் பகுதி வலுப்பெறும்.