ஊர்த்துவ ப்ரஸ்ரித பாதாசனம் --- ஆசனம்
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fmmimages.maalaimalar.com%2FArticles%2F2013%2FSep%2F4f191eda-808f-4f36-9fa5-32f38083ccef_S_secvpf.gif&hash=55addd974a112a149af05b0f6769cbd8212cf35d)
செய்முறை :
விரிப்பில் மல்லாந்து படுத்துக் கொள்ளவும். பின்னர் கால்களை முட்டி வரை மடக்கி முட்டியை இரு உள்ளங்கைகளாலும் பிடித்துக்கொள்ளவும். இரு முட்டிகளுக்கு இடையில் சிறிது இடைவெளி இருக்கட்டும். இந்த நிலையிலிருந்து, மூச்சை உள்ளிழுத்தபடியே இரு கால்களையும் நேராக மேல்புறம் நீட்டவும்.
கைகள் முட்டிகளைப் பிடித்தபடி இருக்கும். மூச்சை வெளியேவிட்டபடி அபானாசன நிலைக்கு கால்களை மடக்கி வரவும். இவ்வாறு ஆறு முறை செய்யவும்.
பலன்கள்: முட்டியைச் சுற்றியுள்ள இறுகிய தசைகள் மற்றும் கணுக்கால் இறுக்கம் குறைந்து நெகிழ்வுத்தன்மை அடையும். வலி நீங்கும். கெண்டை சதைகளும் நன்கு செயல்படும்.