வெள்ளை மக்காச்சோள புட்டு
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fcdnw.vikatan.com%2Fpasumai%2F2013%2F09%2Fzwyzju%2Fimages%2Fpv32c.jpg&hash=ae0451d541934558312058ea93f69d57ce32f6a3)
தேவையானவை:
மக்காச்சோளம் - 100 கிராம்
தேங்காய் துருவல் - தேவைக்கேற்ப
ஏலக்காய்ப் பொடி - சிறிதளவு
நெய் - 20 கிராம்
சர்க்கரை - 50 கிராம்
வறுத்த முந்திரி, திராட்சை - தலா 10 கிராம்
ஊறவிட்ட கடலைப் பருப்பு - ஒரு டீஸ்பூன்
வாழைப்பழ வில்லைகள் - சிறிதளவு
செய்முறை:
மக்காச்சோளத்தைப் புடைத்து, சிவக்க வறுத்து, வெளுப்பாக வரும் வரை மிக்சியில் பொடிக்கவும். இதை, சிறிது உப்பு, வெந்நீர் தெளித்து, ஊறவைத்த கடலைப் பருப்புடன், மூட்டைக் கட்டி, 10-15 நிமிடம் துணியில் இட்லிப் பானையில் வேக விடவும். வெந்தவுடன் நன்கு உதிர்த்து சர்க்கரை, நெய், தேங்காய் துருவல், ஏலக்காய்ப்பொடி, வறுத்த முந்திரி, திராட்சை ஆகியவற்றைச் சேர்த்துக் கலக்கவும். நறுக்கிய வாழைப்பழ வில்லை கலந்து பரிமாறவும்.
சர்க்கரைக்குப் பதிலாக, 75 கிராம் பாகுவெல்லத்தை உருக்கி, சேர்த்தும் செய்யலாம்.