தலைவலிக்கு சிறந்த யோகா --- ஆசனம்
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fmmimages.maalaimalar.com%2FArticles%2F2013%2FAug%2F1a773770-a918-4155-a2b0-daaf11aa5948_S_secvpf.gif&hash=4452c88e33bc73c791a91ea6d8a78cbf7b91c18a)
செய்முறை:
முதலில் இருக்கையின் அமர்ந்து கால்கள் தரையில் பதியுமாறு உட்காரவும். பின்னர் மூச்சை உள் இழுத்தவாறே வலது கையை மட்டும மேலே உயர்த்தவும். இடது கையை இடது கால் முட்டியில் வைத்திருக்கவும். மூச்சை வெளியே விட்டபடி உயர்த்திய கையை வலது கால் முட்டியில் வைக்கவும்.
அடுத்து மூச்சை உள் இழுத்தபடி இரண்டு கைகளையும் உயர்த்தி பின் மூச்சை வெளியே விட்டபடி மடியில் வைக்கவும்.இவ்வாறு மாறி மாறி செய்யவும். இந்த பயிற்சியை தினமும் 15 முறை செய்ய வேண்டும்.
பயன்கள்:
இந்த யோகா பயிற்சி கழுத்துக்கு நல்ல அசைவு கொடுத்து மூச்சை சீராக்குவதால் கழுத்துப் பகுதி இறுக்கம் தளர்ந்து, தலைவலியும் சீராகும். மூச்சை சீராக்கும் பயிற்சி என்பதால் மனம் ஒருநிலைப்படும். மனப்பதற்றம், மனஅழுத்தம் குறைந்து மனம் லேசாகும்.