FTC Forum

Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on September 16, 2013, 08:04:54 PM

Title: ~ கேழ்வரகு - கோதுமை சப்பாத்தி -- சமையல் குறிப்புகள் ~
Post by: MysteRy on September 16, 2013, 08:04:54 PM
கேழ்வரகு - கோதுமை சப்பாத்தி -- சமையல் குறிப்புகள்

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fmmimages.maalaimalar.com%2FArticles%2F2013%2FSep%2F804ce848-2717-4d86-a25a-ceaa4d47c442_S_secvpf.gif&hash=ab5e3450b624f900552e03325317f364936fccb0)


தேவையான பொருட்கள்:
கோதுமை மாவு - 1 கப்
கேழ்வரகு மாவு - அரை கப்
உப்பு - தேவையான அளவு
பால் - கால் கப் சூடு
தண்ணீர் - தேவையான அளவு

செய்முறை : 
• கோதுமை மாவு, கேழ்வரகு மாவு இரண்டையும் ஒன்றாக கலந்து அதில் தேவையான அளவு உப்பு சேர்த்து கலக்கவும்.

• பின்னர் அதில் பால் ஊற்றி பிசையவும்.

• பின்னர் தேவையான அளவு சூடு தண்ணீர் ஊற்றி சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து அரை மணி நேரம் ஊற வைக்கவும்.

• பின்னர் அந்த மாவை சப்பத்திகளாக சுட்டு எடுக்கவும்.

• இந்த சப்பாத்தி டயட்டில் இருப்பவர்களுக்கும், சர்க்கரை நோயாளிகளுக்கும் மிகவும் நல்லது.