FTC Forum

Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on September 15, 2013, 08:42:59 PM

Title: ~ சோயா கிரானுல்ஸ் வெஜிடபிள் கொத்து பரோட்டா--சமையல் குறிப்புகள் ~
Post by: MysteRy on September 15, 2013, 08:42:59 PM
சோயா கிரானுல்ஸ் வெஜிடபிள் கொத்து பரோட்டா--சமையல் குறிப்புகள்

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fcdnw.vikatan.com%2Faval%2F2013%2F09%2Fzdynmu%2Fimages%2Fp60a.jpg&hash=fffda271c49ee14157931c4ad9cfefc66d953a74)

தேவையானவை:
சோயா கிரானுல்ஸ் - ஒரு கப், பரோட்டா - 6, வெங்காயம் - 2, கேரட் - ஒன்று, பச்சை மிளகாய் - 2, இஞ்சி - சிறு துண்டு, பூண்டு - 6 பல், மைதா - அரை கப், கார்ன்ஃப்ளார் - முக்கால் கப், மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், ஃபுட் கலர் - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.


செய்முறை:
வெங்காயம், கேரட், பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டுப் பல் ஆகியவற்றை மிகவும் பொடியாக நறுக்கவும். பரோட்டாவை சின்னச் சின்ன துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். சோயா கிரானுல்ஸை வெந்நீரில் 3 நிமிடம் போட்டு வைத்திருந்து, பிறகு நீரை வடித்து, குளிர்ந்த நீரில் 2 முறை அலசி வைக்கவும்.

மைதா மாவுடன் அரை கப் கார்ன்ஃப்ளார், உப்பு, ஃபுட் கலர், தண்ணீர் சேர்த்து தோசை மாவு பதத்தில் கரைத்துக் கொள்ளவும். கரைத்த மாவில் பரோட்டா துண்டுகளைத் தோய்த்தெடுத்து, சூடான எண்ணெயில்  பொரித்து எடுத்து தனியே வைக்கவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் வெங் காயம், கேரட், பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு, மிளகாய்த்தூள் ஆகிய வற்றை ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து நன்கு வதக்கவும். இதனுடன் சோயா கிரானுல்ஸ், பொரித்த பரோட்டா துண்டுகள் சேர்த்து நன்றாகக் கிளறவும். பிறகு மீதமுள்ள கால் கப் கார்ன்ஃப்ளாரை சிறிது நீரில் கரைத்து அதனுடன் சேர்த்து நன்கு கிளறி சுடச்சுட பரிமாறவும்.