இளநீர் கடற்பாசி
(https://fbcdn-sphotos-g-a.akamaihd.net/hphotos-ak-prn1/564485_444134428970225_1776389756_n.jpg)
தேவையான பொருட்கள்
கடற் பாசி - ஒரு பிடி
தண்ணீர் அரை கப்
இளநீர் - ஒன்று சர்க்கரை - ஒன்றரை டீ ஸ்பூண்
முந்திரி பருப்பு கொஞ்சம்
செய்முறை:
அரை கப் தண்ணீரில் கடற்பாசியை கொஞ்ச நேரம் ஊற வைக்கவும்.
அதை நன்கு கரையும் வரை சர்க்கரையையும் சேர்த்து காய்ச்சவும்.
நன்கு கரைந்ததும் இளநீரை ஊற்றி இறக்கி ஆற விடவும். இதில் பொடியாக நறுக்கிய முந்திரி பருப்பினை தூவி ஒரு தட்டில் ஊற்றி ஆற வைத்து ஃப்ரிட்ஜில் வைத்து பிறகு எடுத்து தேவையான சைஸில் துண்டுகளாகவெட்டி பரிமாறவும்.
இளநீருடன், அதன் வழுக்கை எனும் இளந்தேங்காயையும் சிறு சிறு துண்டுகளாக்கி அதனுடன் சேர்த்தால் சாப்பிடும் போது இன்னும் சுவையாக இருக்கும்