உடல் வலிமைக்கு உடற்பயிற்சி அவசியம்
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fmmimages.maalaimalar.com%2FArticles%2F2013%2FAug%2Fc40fc3fc-61bc-42e2-b379-3b039622d53f_S_secvpf.gif&hash=0e116bc55db0ac17dbfe090851d9f2c8587bc137)
நிதானமாக உடற்பயிற்சியும், தியானப் பயிற்சியும் செய்து வந்தால், சர்க்கரை நோய், இதயநோய், மாரடைப்பு, இரத்த அழுத்தம் போன்ற நோய்கள் வராமல் தடுக்கலாம்.
அறிவிலும், ஆன்மீகத்திலும் மருத்துவத்திலும் சிறந்த நம் முன்னோர்கள் உடலுக்கும், உள்ளத்திற்கும் அவசியம் பயிற்சி தேவை என்பதை சொல்லவே தியானம், யோகா மற்றும் மலை ஏறுதல், பாதையாத்திரை என பல வழிமுறைகளைச் செல்லிவைத்தனர்.
அவர்களும் அதைக் கடைப் பிடித்து நீண்ட ஆயுளோடு வாழ்ந்தனர், விளையாட்டு, உடற்பயிற்சி என்பது ஏதோ ஒரு தேவையற்றது என்று பெற்றோர் நினைக்கின்றனர். படிப்பு ஒன்றே எல்லாவற்றையும் தந்து விடாது. நல்ல ஆரோக்கியமான உடல் இருந்தால்தானே நன்றாக படிக்கவும் முடியும்.
நோய்களின் தாக்கம் வந்த 45 வயதை கடந்தவர்கள்தான் யோகா, தியானம், உடற்பயிற்சி செய்கிறார்கள். குழந்தைகளுக்கு படிப்புடன் உடற்பயிற்சி செய்யச் சொல்லுங்கள். அப்போதுதான் திடகாத்திரமான பலமான இளைஞனாக உங்கள் குழந்தை வளருவார்கள். உடற்பயிற்சியில் பலவகைகள் உள்ளன.
அவற்றில் நடைப்பயிற்சி, மெல்லோட்டம், நீச்சல், என பலவகை உண்டு. நடைப்பயிற்சி என்பது ஏதோ முதியவர்களுக்கு மட்டும் என்று எண்ணிவிடக் கூடாது. பள்ளி செல்லும் குழந்தை முதல் பெரியவர்கள் வரை அனைவரும் அவசியம் மேற்கொள்ள வேண்டிய பயிற்சியாகும். பொதுவாக நடைப்பயிற்சி செய்ய அதிகாலை நேரமே உகந்தது.
காலை எழுந்தவுடன் காலைக் கடன்களை முடித்து, தண்ணீர் அருந்திவிட்டு, இறுக்கமில்லாத ஆடையை அணித்துகொண்டு நடப்பதுதான் நடைப்பயிற்சி. நடைப்பயிற்சி என்றவுடன் சிறிது தூரம் நடப்பது அல்ல. குறைந்தது 2 கி.மீ ஆவது நடக்க வேண்டும்.
கடற்கரையிலோ, சாலை ஓரங்களிலோ அல்லது பூங்காக்களைச் சுற்றியோ நடக்கலாம். நடக்கும்போது பேசிக்கொண்டோ, அரட்டை அடித்துக்கொண்டோ, பாட்டு கேட்டுக் கொண்டோ நடக்கக் கூடாது. மெதுவாகவும், அமைதியாகவும் கைகளை நன்கு வீசி மூச்சுக்காற்றை நன்கு உள்வாங்கி வெளியிட்டு நடக்க வேண்டும்.
நடை ஒரே சீராக இருக்க வேண்டும். நடந்து வந்தவுடன் சிறிது நேரம் குனிந்து, நிமிர்ந்து கைகளை பக்கவாட்டில் அசைத்து உடற்பயிற்சி செய்தல் வேண்டும்.