பக்கவாட்டு உயர்த்த பயிற்சி
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fmmimages.maalaimalar.com%2FArticles%2F2013%2FAug%2F3e584176-7f1f-4f48-bc78-3ba065d21f2f_S_secvpf.gif&hash=0ba220307121607fe5ef31271ac6bf6156b55437)
இன்றைய இளைஞர்கள் தொடர்ந்து கம்யூட்டரில் வேலை செய்வதால் அவர்களுக்கு கழுத்து மற்றும் தோள் பட்டை வலி ஏற்படுகிறது. இந்த பிரச்சனை இருப்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த எளிய பயிற்சியை தினமும் தொடர்ந்து செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
இதற்காக தினமும் 15 நிமிடம் ஒதுக்கினால் போதுமானது. முதலில் தரையில் நேராக நிற்கவும்.இரண்டு கைகளிலும் ஒரு லிட்டர் பாட்டில் அல்லது டம்பிள்ஸைப் பிடித்துக் கொள்ளவும். மூச்சை உள் இழுத்தபடி கைமுட்டியை லேசாக மடக்கிக் கொள்ளவும்.
இது தொடக்க நிலை. இந்த நிலையில் மூச்சை வெளியேவிட்டபடி கைகளைப் பக்கவாட்டில் தோள் வரை உயர்த்தவும். பின் மெதுவாக கீழ் இறக்கவும். ஆரம்பத்தில் 15 முறை செய்ய வேண்டும். நன்கு பழகிய பின்னர் 30 முறை செய்யலாம்.