கால்களுக்கான எளிய பயிற்சி
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fmmimages.maalaimalar.com%2FArticles%2F2013%2FAug%2Fee3edb92-fc18-46d4-8b1c-867d4080a2ef_S_secvpf.gif&hash=faee92b9bb1eab7f8acc278e7d51240272fa6be1)
சிலருக்கு கால் மற்றும் பின்பக்கம் அதிகப்படியான சதை இருக்கும். இந்த சதை குறைய கடினமான பயிற்சி செய்ய வேண்டும் என்பதில்லை. இங்கே கொடுக்கப்பட்டுள்ள இந்த எளிய பயிற்சியை தொடர்ந்து செய்து வந்தால் 3 மாதத்தில் நல்ல பலன் கிடைப்பதை காணலாம்.
பயிற்சி செய்முறை: 5 கிலோ எடையுள்ள டம்ப்பெல்ஸ் ( dumbbells )எடுத்து கொள்ளவும். டம்ப்பெல்ஸ் இல்லாதவர்கள் பாட்டிலில் தண்ணீர் நிரப்பி அதை உபயோகிக்கலாம். முதலில் விரிப்பில் நேராக நின்று டம்ப்பெல்ஸை இரண்டு கைகளாலும் பிடித்துக் கொள்ளவும்.
பின்னர் மெதுவாக இடுப்பு வரை முன்னோக்கி குனியவும். குனிந்த நிலையில் டம்ப்பெல்சை கைகளில் பிடித்தபடி கீழ் இருந்து மேல் நோக்கு தூக்கவும் (படத்தில் உள்ளபடி). இவ்வாறு 20 முறை செய்ய வேண்டும். பின்னர் பழைய நிலைக்கு வரவும்.
ஆரம்பத்தில் 20 முறை செய்தால் போதுமானது. நன்கு பழகிய பின்னர் 40 முறையோ அல்லது அதற்கு மேலும் செய்யலாம். தினமும் தொடர்ந்து இந்த பயிற்சியை செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
இந்த பயிற்சியை தொடர்ந்து செய்து வருவதன் மூலம் வயிறு, இடுப்பு, பின்பக்கம் சதை, கால் தொடை பகுதியில் உள்ள அதிகப்படியான சதை படிப்படியாக குறைவதை நன்கு காணலாம்.