கோர் ஸ்ரென்த் பயிற்சி
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fmmimages.maalaimalar.com%2FArticles%2F2013%2FSep%2Fbfe9a3a3-3484-443e-9298-1bfcf3464764_S_secvpf.gif&hash=72b00e16d8bbd0a35fc09c2aa7671b56607e908b)
கால், கைகள் வலிமையடைய இந்த பயிற்சியை செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும். விரிப்பில் கால்களை நேராக நீட்டி மல்லாந்து படுத்துக் கொள்ளவும். கைகளை தலைக்கு மேல் நேராக நீட்டிக் கொள்ளவும். பின்னர் இயல்பான சுவாசத்தில் வலது கை, இடது காலை மட்டும் ஒரே நேரத்தில் மேல் நோக்கி தூக்க வேண்டும்.
கால், கைகளுக்கும் தரைக்கும் இடைவெளி 2 அடி இருக்கும் படி பார்த்துக்கொள்ள வேண்டும். இந்த நிலையில் சில வினாடிகள் இருந்த பிறகு கால்களை மாற்றி இதே போல் இடது கை, வலது காலை தூக்க வேண்டும். இந்த நிலையில் சில விநாடிகள் இருந்த பின்னர் பழைய நிலைக்கு வரவும்.
சிறிது நேரம் இடைவெளிக்கு பின் கால்கள், கைகள் இரண்டையும் ஒரே நேரத்தில் தூக்க வேண்டும். இந்த நிலையில் சில விநாடிகள் இருந்த பின்னர் பழைய நிலைக்கு வர வேண்டும். இவ்வாறு இந்த 3 செட்டுகளையும் 20 முதல் 25 முறை செய்ய வேண்டும்.
இந்த பயிற்சியை வீட்டில் ஓய்வு நேரங்களில் செய்யலாம். இந்த பயிற்சி செய்வதால் வயிற்று பகுதியில் உள்ள அதிகப்படியான சதை குறையும். மேலும் கால்களுக்கும், கைகளுக்கும் நல்ல வலிமை கிடைக்கும்.