FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: micro diary on September 13, 2013, 02:47:54 PM
-
புல்லாங்குழலாக ஆசை
உன் இதழ் ஸ்பரிசம் பெற
வீணையாக ஆசை
உன் விரல் என்னை மீட்க
கண்ணாடியாக ஆசை
உன்னையே என்னில் பிரதிபலிக்க
ஆடையாக ஆசை
உன்னுடன் ஒட்டி உறவாட
முடி கற்றையாக ஆசை
உன் நெற்றியில் புரண்டு
விளையாட ..
புன்னகையாக ஆசை
என்றும் உன் இதழில் குடி கொள்ள
விரல் நகமாக ஆசை
உன் சதையோடு சதையாக
பிண்ணி பிணைந்து இருக்க
உன் காலனியாக ஆசை
உன் பாதம் தாங்க ...
நான் நீயாகி போக வேண்டும்
நான் என்பது தொலைந்து
நீயாகவே மாறிட வேண்டும் ...]
-
Nalla arumaiyana vipareethamana aasai
Miha arumai micro mam......
-
arul sir assai padanum ovovruttharum antha assaiye oru naal nijamagalam
-
semaya iruku micro...