FTC Forum

தமிழ்ப் பூங்கா => பொதுப்பகுதி => Topic started by: MysteRy on September 13, 2013, 02:12:30 PM

Title: ~ பாம்பை வீட்டில் நெருங்க விடாத மூலிகைகள் ~
Post by: MysteRy on September 13, 2013, 02:12:30 PM
பாம்பை வீட்டில் நெருங்க விடாத மூலிகைகள்

(https://m.ak.fbcdn.net/sphotos-d.ak/hphotos-ak-prn2/q71/1236384_499466900146634_1921930588_n.jpg)


கண்டு கொள்வாய் சொல்லுகின்றேன்
. . . . உலகோர்க் கெல்லாம் காரமா
மூலியடா பங்கம்பாளை கொண்டு
. . . . வந்து உன் மனையில் வைத்திருந்தால்
கொடிய விடம் அணுகாது குடியோடிப்போம்
. . . . நன்றானநாகதாளிக்கிழங்கு தானும்
நன்மனையிலிருக்க விடம் நாடாதப்பா
. . . . அன்றான ஆகாசகருடன் மூலி
அம்மனை யிலிருக்க விடமற்றுப்போம்

- சித்தர் பாடல்.

ஆடு தீண்டாப்பாளை, நாகதாளிக் கிழங்கு, ஆகாச கருடன் கிழங்கு, சிறியா நங்கை, இம் மூலிகைகளை வீட்டில் வளர்த்து வந்தால் இதன் வாசனைக்கு விச ஜந்துக்கள், பாம்புகளை நெருங்க விடாது என்கிறது பாடல்.

பாம்பு வீட்டினுள் வந்துவிட்டால் சோற்றுக் கஞ்சியில் உப்பைக் கரைத்து அதனுடன் பூண்டை அரைத்துக் கரைத்து இதில் சிறிது மண்ணெண்ணெய் சிறிது கலந்து பாம்பு இருக்கும் பகுதியில் சுற்றி தெளித்து விட பாம்பு சீராது ,கடிக்காது, ஓடாது அங்கேயே மயங்கி கிடக்கும்.