FTC Forum

Special Category => மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty => Topic started by: MysteRy on September 13, 2013, 02:07:52 PM

Title: ~ பாத வெடிப்பு- பாட்டி வைத்தியம் ~
Post by: MysteRy on September 13, 2013, 02:07:52 PM
பாத வெடிப்பு- பாட்டி வைத்தியம்

(https://fbcdn-sphotos-e-a.akamaihd.net/hphotos-ak-snc6/s480x480/10290_524238790943724_1837552454_n.jpg)


பலருக்கு முகத்தில் பருக்கள் தோன்றுவதை போல் பாதங்களில் வெடிப்பு ஏற்படுகிறது. ஆரம்பத்திலேயே பாதங்களை பராமரிப்பதில் ஆர்வம் காட்டினால் நிரந்தரமாக வெடிப்பு வருவதை தடுக்க முடியும்.
பாதங்களை பராமரிக்க சில எளிய டிப்ஸ்

மருதாணியை நன்கு அரைத்து வெடிப்பு உள்ள இடங்களில் தேய்த்து உலர விடவேண்டும் பின்பு தண்ணீரால் கழுவி வர நாளடைவில் பித்த வெடிப்பு குணமாகும். பாதம் தாங்கும் அளவிற்கு தண்ணீரை சூடுபடுத்தி, அதில் சிறிது உப்பும் எலும்பிச்சை சாறும் சேர்த்து அதில் பாதத்தை வைத்திருந்து பின்பு சொரசொரப்பான பொருட்களால் தேய்த்து வந்தால் கெட்ட செல்கள் உதிரும்.

வேப்பிலை, மஞ்சள் ஆகியவற்றுடன் சிறிது சுண்ணாம்பு சேர்த்து அரைத்து, விளக்கெண்ணெய் சேர்த்து வெடிப்பு ஏற்பட்ட பகுதிகளில் தேய்த்து வந்தால் பித்த வெடிப்பு குணமடையும். பப்பாளி பழத்தை நன்கு அரைத்து அதனை பாதங்களில் வெடிப்பு உள்ள பகுதிகளில் நன்கு தேய்த்து வர வெடிப்பு குணமாவதுடன் எரிச்சல் குறையும். தரமான காலணிகளை பயன்படுத்துவதன் மூலம் வெடிப்புகளை தவிர்க்கலாம்.

விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய் சம அளவில் எடுத்துக்கொண்டு அதில் மஞ்சளை சேர்த்து பாதத்திற்கு தடவி வந்தால் வெடிப்பு ஏற்படாது.
இரவு நேரங்களில் படுக்க செல்லும் முன்பு காலை சுத்தப்படுத்தி சிறிது தேங்காய் எண்ணெய் தடவி வந்தால் வெடிப்பு வருவதை தவிர்க்கலாம். தினமும் குளித்ததும் பாதத்தை துணியால் துடைத்து பின் விளக்கெண்ணெய் தேய்த்து வந்தாலும் வெடிப்பை தவிர்க்கலாம்.