FTC Forum

தமிழ்ப் பூங்கா => பொதுப்பகுதி => Topic started by: MysteRy on September 12, 2013, 11:24:13 AM

Title: ~ காட்டன் புடவைகளை பராமரிப்பது எப்படி..? ~
Post by: MysteRy on September 12, 2013, 11:24:13 AM
காட்டன் புடவைகளை பராமரிப்பது எப்படி..?

(https://fbcdn-sphotos-b-a.akamaihd.net/hphotos-ak-ash4/321384_451545684932490_1567364475_n.jpg)


பார்ப்பதற்கு ஒரே மாதிரி இருந்தாலும் மட்டமான காட்டன் சேலைகள் சில நாட்களிலேயே பழைய புடவை போல மாறிவிடும். கைத்தறி காட்டன் புடவைகள்தான் எப்போதும் சரியான சாய்ஸ்.

பெங்கால், மங்களகிரி, ராஜஸ் தான், காஞ்சி போன்ற காட்டன்கள் எப்போதும் ‘பளிச்’ லுக் தரும். அகலம் குறைவாக இருந்தாலும், சுருங்காது. அயர்ன் தேவையில்லை. டார்க் கலர்களைவிட லைட் கலர் பெஸ்ட். நிறம் வெளுக்கும் தன்மை டார்க் கலர்களில் அதிகம். காட்டன் புடவைகளை சரியாகப் பராமரிக்காவிட்டாலும் சீக்கிரமே சுருங்கிப் போய்விடும்.

அடிக்கடி துவைக்காமல் இரு முறை பயன்படுத்திய பிறகு துவைக்கலாம். பிரஷ் வாஷ் செய்யக்கூடாது. புடவையின் ஷைனிங் போய்விடும் என்பதால் வாஷிங் மெஷினை தவிர்ப்பது நல்லது. நல்ல தரமான கஞ்சியை மைல்டாக பயன்படுத்தினால் பல வருடங்கள் தாண்டியும் பளிச்சென இருக்கும்.