FTC Forum

தமிழ்ப் பூங்கா => பொதுப்பகுதி => Topic started by: MysteRy on September 12, 2013, 11:10:51 AM

Title: ~ பெண்ணுக்கு வளைகாப்பு (ஸீமந்தம்) நடத்துவது ஏன் தெரியுமா? ~
Post by: MysteRy on September 12, 2013, 11:10:51 AM
பெண்ணுக்கு வளைகாப்பு (ஸீமந்தம்) நடத்துவது ஏன் தெரியுமா?

(https://fbcdn-sphotos-g-a.akamaihd.net/hphotos-ak-frc3/1011319_480403465380045_2044659380_n.jpg)


பெண்களுக்கு நடத்தப்படும் வளைகாப்புக்கு ஸீமந்தம் என்ற பெயர் எப்படி வந்தது தெரியுமா? தற்காலத்தில் பெரும்பாலானவர்கள் மாப்பிள்ளை வீட்டில் வளைகாப்பு நடத்தி தாய் வீட்டுக்கு அழைத்து வருகிறார்கள்.

ஆனால், அக்காலத்தில் தாய் வீட்டுக்கு பெண்ணை வரவழைத்து அங்கு வைத்தே வளைகாப்பு நடக்கும். அப்போது பெண்ணின் தாய் மகளுக்கு, லட்சுமியை பற்றிய பாடல்களைப் பாடிக் கொண்டே நெற்றி வகிட்டில் முள்ளம்பன்றியின் முள்ளால் லேசாக கீறி குங்குமம் வைப்பார். முள்ளம்பன்றியின் முள்ளால் கீறுவது வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு நன்மையைத் தரும்.

வகிடு என்ற சொல்லின் சமஸ்கிருதப் பெயரே ஸீமந்தம். பெண்களின் வகிட்டில் லட்சுமி குடியிருக்கிறாள். நெற்றியில் பொட்டிட்டால் அவள் சந்தோஷமடைவாள். அப்பெண்ணுக்கு பிறக்கும் குழந்தை செல்வ வளத்துடன் வாழும் என்ற நம்பிக்கையினால் ஸீமந்தம் நடத்துகிறார்கள்.