FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Arul on September 12, 2013, 12:30:00 AM
-
என்னை இன்னும் காணவில்லையே
என்று எதிர்பார்த்து காத்திருப்பாய்,
வந்தவுடன் அன்போடு அழைத்திடுவாய்
ஏனப்பா இவ்வளவு நேரம் என்று
நீ கேட்ட ஒற்றை வார்த்தையிலே
உன் முகம் பார்த்த அந்த கணம்
என் கவலைகள் அனைத்தும் பறந்திடும்மா
உன் கையால் அமுது படைத்து
அன்புடனே பரிமாரும் போது
நான் சாப்பிடும் முகம் பார்த்து
எனை அறிந்து கொள்வாய்
எனக்கு பிடிக்கிறதா பிடிக்கலையா என்று
உனக்கு பிடிக்கலையா சாமி என்று
எனக் கேட்கும் போதே என் பதிலுக்கு
காத்திராமல் உடனே பிடித்ததை
செய்துகொடுப்பாய்
நான் உறங்கும் வரை காத்திருந்து
உறங்கிய பின் உறங்கிடுவாய்
நான் விழிக்கும் முன்னே எழுந்திடுவாய்
இத்தனை அன்பை கொட்டிக் கொடுக்கும்
என் தெய்வமே உனக்கு நான் தான்
எதைக் கொடுப்பேனோ
அடுத்த ஜென்மம் ஒன்றிருந்தால்
மீண்டும் எனக்கே மகளாக
பிறந்திடம்மா.............
உன்னை கண் போல காத்திட
அருள் கொடம்மா...........