ஊமத்தம் பூவின் மருத்துவ குணங்கள்:-(https://fbcdn-sphotos-h-a.akamaihd.net/hphotos-ak-prn1/164929_584003741621945_449172453_n.jpg)
பொதுவாக நோய்தணிப்பானாகவும், சிறப்பாக இசிவு நோய் தணிப்பானாப்பானகவும் செயற்படும். அறுவை சிகிச்சைக்கும் மகப்பேருக்குமயக்க மருந்தாகவும் பயன்படுகிறது.
இலையைநல்லெண்ணெயில் வதக்கிக் கட்ட வாதவலி, மூட்டு வீக்கம், வாயுக்கட்டிகள், அண்ட வாயு, தாய்பால் கட்டிக்கொண்டு வலித்தல், நெரிகட்டுதல், ஆகியவை குணமடையும்.
இலைச்சாற்றுடன் சமன் நல்லெண்ணெய் கலந்துகாச்சி, இளஞ்சூட்டில் 2-3 துளி காதில் விடச்சீதளத்தால் வந்த காது வலிதீரும்.
இலையை நீர் விடாது அரைத்து நல்லெண்ணெயில் வதக்கி நாய்கடிப் புண்ணில்கட்ட ஆறும்.மூன்று துளிச் சாறு வெல்லம் கலந்து காலை,மாலை 3 நாள் மட்டும் கொடுக்க நஞ்சு தீரும்.கடும் பத்தியம்- பகலில் தயிர் சோறும்இரவில் பால் சோறும் உப்பில்லாமல் சாப்பிடவும்.
இலைச்சாற்றைச் சமளவு தேங்காய் எண்ணெயில் காச்சி சிறிதளவு மயில் துத்தம் கலந்து வெளிப்பூச்சாகப் பயன்படுத்த ரணம் சதைவளரும் புண்புரைகள், தீரும்.
ஊமத்தைப் பிஞ்சை அவரவர் உமிழ் நீரில்மையாய் அரைத்துத் தடவ புழுவெட்டு தீரும்,புழு இறந்து முடி வளரும்.
இலை, பூ, விதை மூன்றையும் பாலில் பிட்டவியலாய் அவித்து உலர்த்தி, தூள் செய்து (ஒன்றிரண்டாய்) பிடியாய்ச் செய்து புகைக்க ஆஸ்துமா, மூச்சுத்திணரல் உடனே குறையும்.
ஊமத்தை மயக்கத்தை உண்டாக்கும். விடத்தன்மையுடையது. இதன் விடம் முறிய தாமரைக்கிழங்கை அரைத்து பாலில் இரு வேழை மூன்று நாள்கொடுக்கலாம். இக்காய் பில்லி, சூன்யம் ஆகியவற்றை அகற்றும், முறிக்கும்.
சித்தம் பிரமை -: ஊமத்தம் பூவை இரவு தண்ணீரில்போட்டு ஊறவைக்கவும். மறு நாள் காலைதலைக்குத் தேய்த்துக் குளிக்கவைக்கவும். 5-7 நாள் இவ்வாறு குளிக்க வைத்தால் இந்தப் பிரமை உன்மத்தம், பைத்தியம் குணமாகி விடும்.
அனைத்து வகைப் புண்ணுக்கும். - ஊமத்தம்இலைச்சாறு 500 மி,லி.தேங்காய் எண்ணெய்500 மி.லி. கலந்து மயில் துத்தம் 30 கிராம்போட்டு சுண்டக் காச்சி சாறு வடிக்கவும்.இதனை அனைத்து வகையான புண்களுக்கும்மேல் பூச்சாக இட குணமடையும்.மேகப் புண், நீரிழிவுப்புண், ஆராத குழிப்புண், வளர் புண் குணமடையும்.
பேய்குணம் - : இதன் காய்,விதையும், மருதாணிப் பூவும், உலர்த்திய தூள் புகைக்க பேய் குணம் விலகும்.