FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: micro diary on September 09, 2013, 08:49:36 PM
-
உன் முத்தத்திற்காகவே
ஒவ்வொரு விடியலையும்
எதிர் நோக்கி செல்கிறேன்
உன் முத்தம் பெறும் நோக்கே
நம் ஒவ்வொரு சண்டையின்
விதியமைப்பும்.
சதி அறிந்தோ என்னவோ!
வென்றாலும் தோற்றாலும்
வீம்புக்கென்றே முத்தம் தவிர்ப்பாய்.
வெறுப்பேற்றும் நோக்குடன்
பிடிவாதமாய் தரமால்
தர்க்கம் செய்வாய்……..
போராடிக் கொடுத்தாலும்
பொசுக்கென்று துடைத்தெறிவாய்.
பின்……….
பொய்ச் சோகம் எனில் கண்டு
போதுமட்டும் அளித்தமர்வாய்.
இதழ் குவித்து கண்ண குழி
விழ நீ பேசும்…….
அழகு மழலைக்கு சமம்
ஆவாய்………..
உன்னை இதய
கருவறைக்குள் சுமக்க
என தவம் செய்தேனடா…………
நம் அன்புக்கு
நாட்கள் மாதங்கள்
வருஷங்கள் தாண்டி
என்னுள் ஜீவா நதியாய்…
-
micro really semaiya iruku....
-
மிகவும் அருமையான வரிகள் micro மேலும் இது போன்ற கவிதைகள் எழுத என் வாழ்த்துக்கள்!!!!!!!!!!!!