FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: micro diary on September 08, 2013, 07:27:38 PM
Title:
அழகு
Post by:
micro diary
on
September 08, 2013, 07:27:38 PM
மழையோடு ஓவியமாய்
சிரிக்கும் வானவில்
அழகு..
மடலை கூட மவுனமாய்
விரிக்கும் பூக்கூட்டம்
அழகு..
மழைதொடும் தருணத்தில்
மணக்கும் பூமிப்பெண்…
அழகு..
சம்பளமின்றி சல்யூட் செய்யும்
சாலையோர மரங்கள்..
அழகு….
சத்தமின்றி கருவறையில்
சந்தோசப்படுத்தும் பிஞ்சுசிசு
அழகு…
புன்சிரிப்பில் மவுனமாய்
புண்படுத்தாத உறவுகள்
அழகு…..
சுவாசமுள்ளவரை சுவாசத்தில்
சுவாசிக்கும் நம் காதல்
அழகு..
எங்கிருந்தாலும் மவுனமாய்
நலம் விரும்பும் நட்பு
அழகு..
Title:
Re: அழகு
Post by:
சாக்ரடீஸ்
on
September 08, 2013, 07:33:36 PM
ennaku unnoda natpum alagu...micro
Title:
Re: அழகு
Post by:
Yousuf
on
September 08, 2013, 07:40:27 PM
எங்கிருந்தாலும் மவுனமாய்
நலம் விரும்பும் அண்ணன் தங்கை
உறவும் அழகு!
நல்ல கவிதை! தங்கைக்கு வாழ்த்துக்கள்!!!
Title:
Re: அழகு
Post by:
சிநேகிதன்
on
September 08, 2013, 07:43:55 PM
Quote from: micro diary on September 08, 2013, 07:27:38 PM
எங்கிருந்தாலும் மவுனமாய்
நலம் விரும்பும் நட்பு
அழகு..
இக்கவிதையில் குறிப்பிடப்பட்டுள்ள எண்ணங்கள் எல்லாமே அழகு.
Title:
Re: அழகு
Post by:
micro diary
on
September 08, 2013, 07:58:26 PM
thz frnds
Title:
Re: அழகு
Post by:
பவித்ரா
on
September 08, 2013, 08:46:54 PM
எங்கிருந்தாலும் மவுனமாய்
நலம் விரும்பும் நட்பு
அழகு..
kavithaiye sema azhagu athula intha vari en manasa thotathu machan asathara thodarnthu eluthu machan