FTC Forum

Special Category => மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty => Topic started by: MysteRy on September 08, 2013, 02:25:19 PM

Title: ~ குண்டாகவும், குள்ளமாகவும் இருப்பவர்களுக்கான சில அலங்கார குறிப்புக்கள்! ~
Post by: MysteRy on September 08, 2013, 02:25:19 PM
குண்டாகவும், குள்ளமாகவும் இருப்பவர்களுக்கான சில அலங்கார குறிப்புக்கள்!

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2F1.bp.blogspot.com%2F-0P1p8c7xz68%2FTfRwybuZEKI%2FAAAAAAAAEPo%2FMYHmC8xa_54%2Fs320%2Fsaree-1.jpg&hash=1985c8573b9b5cd947d9f1892f80f1246dc2c275)


* இவர்களும் வழுவழுப்பான உடைகளை கண்டிப்பாக தவிர்த்தே ஆக வேண்டும் வேறு வழியே இல்லை. இவ்வகை உடைகள் இன்னும் உயரம் குறைந்தவர்களாக காட்டும். பெண்களுக்கு மிக முக்கியமான அம்சம் குறிப்பாக குள்ளமாக இருப்பவர்களுக்கு ஷோல்டர் அகலமாக இருப்பது, உங்கள் ஷோல்டர் அகலமாக இருக்க வேண்டியது அவசியம்.


* ஒரு சிலரை பார்த்தால் அவர்களுக்கு ஷோல்டர் அகலம் குறைவாக இருக்கும், அவர்களுக்கு இருக்கும் ஒரே வழி காட்டன் புடவைகள் தான் இவைகள் தான் உங்கள் சோல்டரை மறைத்து அகலப்படுத்தி காட்டும், அதோடு காட்டன் புடவை என்பதால் சதை பகுதிகளை அப்பட்டமாக காட்டாது.

* பெண்கள் சுடிதார் அணியும் போது கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம் தொள தொளன்னு அணியக் கூடாது குறிப்பாக குள்ளமாக குண்டாக உள்ளவர்கள், அதே போல ரொம்ப இறுக்கமாகவும். இடுப்பு பகுதியில் அளவு குறைத்து ஓரளவாவது ஸ்ட்ரக்சர் கொண்டு வரும் படி இருக்க வேண்டும். ரொம்ப இறுக்கமாகவும் இருந்தால் பின்புறம் அசிங்கமாக தெரியும்.