FTC Forum

Special Category => சமையல் கலசம் => Topic started by: kanmani on September 08, 2013, 05:27:20 AM

Title: திருவாதிரை களி / Thiruvathirai kali
Post by: kanmani on September 08, 2013, 05:27:20 AM
தேவையானவை:

பச்சரிசி_ஒரு கப்
பச்சைப்பருப்பு_1/4 கப்
கடலைப்பருப்பு_ஒரு டீஸ்பூன் (விருப்பமானால்)
வெல்லம்_ஒன்னேகால் கப்
தேங்காய்ப்பூ_ஒன்றிரண்டு டீஸ்பூன்
உப்பு_துளிக்கும் குறைவாக‌
ஏலக்காய்_1
நெய்_1/4 கப்
முந்திரி_10

செய்முறை:

பச்சரிசி,பச்சைப்பருப்பு,கடலைப்பருப்பு மூன்றையும் தனித்தனியாக வெறும் வாணலில் சிவக்க வறுத்துக்கொள்ளவும்.

ஆறியதும் எல்லாவற்றையும் ஒன்றாக மிக்ஸியில் போட்டு ஏலக்காயையும் சேர்த்து ரவை பதத்திற்குப் பொடித்துக்கொள்ளவும்.துளி உப்பையும் இதனுடன் சேர்த்துக்கொள்ளவும்.

kali rava

களி கிண்டப்போகும் பாத்திரத்தில் 4 கப்புகள் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்தவும்.

வேறொரு பாத்திரத்தில் வெல்லத்தைப் பொடித்துப்போட்டு அது மூழ்குமளவு சிறிது தண்ணீர் விட்டு கொதிக்க வைக்கவும்.

வெல்லம் கரைந்ததும் தூசு,மண் இல்லாமல் வடித்துவிட்டு மீண்டும் அடுப்பிலேற்றி தீயை மிதாமாக வைத்து லேஸான பாகுப்பதத்திற்கு கொதிக்க விடவும்.

இதற்குள் களிக்கானத் தண்ணீர் கொதிக்க ஆரம்பிக்கும்.அப்போது தேங்காய்ப் பூவைப்போட்டு,பொடித்து வைத்துள்ள ரவையையும் சிறிதுசிறிதாகக் கொட்டிக்கொண்டே whisk ஆல் விடாமல் கிளறவும்.கட்டிகளில்லாமல் பார்த்துக்கொள்ளவும்.

ரவையைக் கொட்டிக் கிளறும்போதே வெந்துவிடும்.தீயை மிதமாக்கிக்கொண்டு,வெல்ல நீரை ஊற்றிக் கிண்டிவிட்டு,எல்லாம் ஒன்றாகக் கலந்ததும் அடுப்பை நிறுத்திவிட்டு மூடி வைக்கவும்.

ஒரு கரண்டியில் நெய்விட்டு முந்திரியை வறுத்துக்கொட்டவும்.