FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Arul on September 07, 2013, 09:04:51 PM
-
உன்னோடு பேசிய ஒவ்வொரு வார்தைகளும்
என் மனதில் கல்வெட்டுக்களாய் பதிந்து போனதடி,
உனக்கு தான் உண்மை பேசுவதில் ஏனோ தடுமாற்றம்
என்னிடம் மறைத்து பேசுவதில் உனக்கு ஆனந்தம்
ஏங்கிதான் போகிறேனடி உன்னிடம் இருந்து வரும்
அன்பு வார்த்தைகளுக்கு..
உன் மனதில் உள்ளதை கேட்க நான் தவம் கிடக்கிறேனடி
நீயோ தவணை முறையில் சொல்லி என்னை கொல்கிறாயடி
என் மனதை சந்தோசப் படுத்த தயக்கம் தான் உனக்கு ஏனடி
என்னோடு இருக்கும் சில நிமிடங்ளில் கண்களால் பேசிவிட்டு
நீ பறந்து செல்கிறாய் நான் உயிரை உன்னோடு அனுப்பிவிட்டு
இங்கு பிணமாய் அலைந்து செல்கிறேன் ...............
உன் நினைவுகளை மட்டும் வைத்துக் கொண்டு........
-
hi arul nice romba nala ezhuthi iruka
என்னோடு இருக்கும் சில நிமிடங்ளில் கண்களால் பேசிவிட்டு
நீ பறந்து செல்கிறாய் நான் உயிரை உன்னோடு அனுப்பிவிட்டு
இங்கு பிணமாய் அலைந்து செல்கிறேன்
nice lines arul azhaga feel ah velipaduthi iruka
-
மிக்க நன்றி Micro diary
எண்ணங்கள் கொண்டு எழுத்துகளை வடிவமைப்போம்
வார்த்தைகளைக் கொண்டு வாக்கியங்கள் படைப்போம்
வாக்கியங்கள் கொண்டு வானுலையும் வளைப்போம்
வாழ்த்தியமைக்கு மிக்க நன்றி
என்றும் உங்கள் அருள்.........