FTC Forum
Special Category => மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty => Topic started by: kanmani on September 05, 2013, 10:08:37 PM
-
நெல்லிக்காயை விதை நீக்கி இடித்து சாறு பிழிந்து சம அளவு சர்க்கரைத் சேர்த்து மணப்பாகு தயார் செய்து சாப்பிடலாம். அல்லது நெல்லி வற்றலை இடித்து தூளாக்கி சம அளவு சர்க்கரைத் சேர்த்து காலை நேரத்தில் ஒரு டீஸ்பூன் சாப்பிட்டு வென்னீர் அருந்தலாம். இதனால் கப சம்பந்தமான நோய்களும், பித்த சம்பந்தமான நோய்களும் தீருவதுடன் அதிக மன உளைச்சலால் ஏற்படும் கை உதறல் குணமாகும்.
பெரும்பாலும் கைகள் நடுங்குவதை நரம்புத் தளர்ச்சி என்றோ, நடுக்கல்வாதம் என்றோ எண்ணி பல உயர்ந்த மருந்துகளை அளித்தும் பலன் கிட்டாத நிலையில் நெல்லி வற்றல் சம்பந்தப்பட்ட மருந்துகள் சிறப்பான குணத்தை அளிக்கும்.
மதுமேக நோயாளிகளுக்கு நெல்லியுடன் கறிமஞ்சளும், நாவல் கொட்டையும் சம அளவுக்கு சேர்த்து அரைத்து காலை, மாலை வெறும் வயிற்றில் அரை ஸ்பூன் வீதம் சாப்பிட்டு வர நோய் விரைவில் கட்டுப்படும்.