FTC Forum

Special Category => சமையல் கலசம் => Topic started by: kanmani on September 05, 2013, 09:43:19 PM

Title: மேங்கோ ரசமலாய்
Post by: kanmani on September 05, 2013, 09:43:19 PM
என்னென்ன தேவை?

பால் - 1 லிட்டர்,
கன்டென்ஸ்டு மில்க் - 200 கிராம்,
எலுமிச்சைப்பழம் - 2, 
சர்க்கரை - 100 கிராம்,
மாம்பழ விழுது - 100 கிராம்,
ஏலக்காய் தூள் - 1 சிட்டிகை,
பொடித்த பிஸ்தா - சிறிது.
எப்படிச் செய்வது?

பால் கொதிக்கும் போது, எலுமிச்சைச்சாறு சேர்த்து அடுப்பை அணைக்கவும். பால் திரிவதை மஸ்லின் துணியில் கட்டி வைத்தால்,  தண்ணீர் வடியும்.  உள்ளே உள்ள பனீரை கைகளால் நன்கு மசித்து, மிருதுவாக்கி, இதய வடிவத் துண்டுகளாக வெட்டி வைக்கவும். மாம்பழத்தை தோல் நீக்கி, கூழாக  அரைத்து வைக்கவும். சர்க்கரையில் தண்ணீர் விட்டு, ஒரு கம்பிப் பதத்துக்கு பாகு வைக்கவும்.  அந்தப் பாகில் சிறிதளவை எடுத்து ஆற வைக்கவும்.  சர்க்கரைப்பாகு ஓரளவு கொதிக்கும் போதே, அதில் தயாராக உள்ள இதய வடி வத் துண்டுகளைச் சேர்க்கவும்.

அவை மேலே மிதந்து வரும் போது எடுத்து, ஆற வைத்துள்ள பாகில் போடவும். கன்டென்ஸ்டு மில்க்கில் ஏலக்காய் தூளும், தேவை யானால் சிறிது  சர்க்கரையும் சேர்த்துக் கொதிக்கவிடவும். மாம்பழக்கூழ் சேர்த்து இறக்கவும். சர்க்கரைப்பாகில் ஊறிக் கொண்டிருக் கும் மலாய் துண்டுகளை எடுத்து,  அழுத்தி, அதிகப்படி பாகை எடுத்துவிட்டு, கன்டென்ஸ்டு மில்க் கலவையில் சேர்க்கவும். பொடித்த  பிஸ்தாவால் அலங்கரித்து ஃப்ரிட்ஜில் குளிர  வைத்துப் பரிமாறவும்.