FTC Forum

Special Category => சமையல் கலசம் => Topic started by: kanmani on September 03, 2013, 11:58:26 PM

Title: தளகுளி (Thalaguli)
Post by: kanmani on September 03, 2013, 11:58:26 PM


    சுத்தமான வெள்ளை எள்ளு - 3 1/2 கோப்பை
    கித்துள் சர்க்கரை - 500 கிராம்
    சுற்றுவதற்கு:
    பார்சல் பேப்பர் (இது Shopping Bag Paper போல இருக்கும்)
    பேக்கிங் ஷீட்
    வெள்ளை டிஷ்யூ

 

 
   

தேவையானவற்றை தயாராக எடுத்து வைக்கவும்.
   

கடதாசிகளை முன்பே அளவிற்கு வெட்டி வைக்கவும். பேக்கிங் பேப்பர் தளகுளியின் நீளத்திற்கு முழுவதாகச் சுற்றுகிற அளவில் இருக்க வேண்டும். பார்சல் பேப்பர் அதைவிடப் பெரிதாக இருக்க வேண்டும். டிஷ்யூ தாள் இன்னும் பெரிதாக வெட்டவேண்டும். இரண்டு ஓரங்களிலும் ஒன்றரை அல்லது இரண்டு சென்டிமீட்டர் அளவுக்கு குஞ்சம் வெட்ட வேண்டும்.
   

மேலே குறிப்பிட்ட அளவில் பாதி அளவு எள்ளை ப்ராசெசரில் போட்டு நன்கு சுற்றி எடுக்கவும். மீதியை ஒன்றும் பாதியுமாக வருமாறு சுற்றி எடுத்து அனைத்தையும் வேறு பாத்திரத்தில் சேகரிக்கவும்.
   

உடைத்து வைத்துள்ள சர்க்கரையை அதே ப்ராசெசரில் போட்டு பெரிதும் சிறிதுமாக வருமாறு சுற்றி எடுக்கவும். (அதிலிருந்து இரண்டு தேக்கரண்டி அளவு தனியாக எடுத்து வைக்கவும்).
   

சர்க்கரையை அரைத்த எள்ளுடன் சேர்த்து முட்கரண்டியால் நன்கு உதிர்த்துக் கிளறவும்.
   

இனி மூன்று அல்லது நான்கு பென்சில்கள் பருமனில் மூன்று சென்டிமீட்டர் நீளத்திற்கு உருளை வடிவில் பிடிக்க வேண்டும். பிடிப்பது பொறுமையைச் சோதிக்கும் வேலை. பிளாஸ்டிக்கினாலான சிறிய வெற்று மாத்திரை டப்பா ஒன்றை அடிப்பக்கம் அளவுக்கு வெட்டி நீக்கிவிட்டு, கழுவித் துடைத்து வைத்தால் அச்சாகப் பயன்படுத்தலாம்.
   

கலந்து வைத்துள்ளதிலிருந்து ஒரு கோப்பை அளவு எடுத்து, பத்து அல்லது பதினைந்து விநாடிகள் மைக்ரோவேவில் வைத்து எடுக்கவும். பாத்திரத்தின் அடியிலுள்ள சர்க்கரை இளக ஆரம்பித்திருக்கும். சிறிய கரண்டியால் ஒரு முறை கிளறிவிட்டு, வெட்டி வைத்த டப்பாவின் உள்ளே நிரப்பி இறுக்கி இரு பக்கமும் மேசையில் அழுத்தித் தேய்க்கவும். பின்பு விரலால் தள்ளினால் தளகுளி அமைப்பாக வரும். முழுக் கலவையையும் இப்படிப் பிடித்து வைக்கவும். கடைசி இரண்டு மூன்றுக்கு எள்ளு அதிகமாக இருக்கும். பிடிக்க வராது. இந்தச் சமயம் எடுத்து வைத்திருக்கும் மீதிச் சர்க்கரையைச் சேர்த்துக் கலந்து பிடிக்கலாம்.
   

இனி ஒவ்வொன்றாக பார்சல் பேப்பரில் சுற்றி, அதன் மேல் பேக்கிங் பேப்பர் சுற்றவும்.
   

வெளியே டிஷ்யூ சுற்றி ஓரங்களை முறுக்க வேண்டும்.
   

தளகுளியில் எள்ளு முழுவதாகக் கடிபடும். சர்க்கரையும் கட்டியாகக் கடிபட்டால்தான் சுவை.

 

மேலே குறிப்பிட்ட அளவுக்கு, பிடிக்கும் அளவைப் பொறுத்து அறுபது முதல் எழுபது தளகுளி வரை கிடைக்கும்.