FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Arul on September 02, 2013, 07:26:15 PM
-
அன்பு பசியால் கிடந்தவனுக்கு
அள்ளி அள்ளி அமுது படைத்தாய்,
அள்ளி அமுது கொடுத்த கையில்,
விசத்தை ஏனடி கொடுத்தாயோ
ஏனென்ற காரணம் அறியாமலே
இறக்க வைத்தாய் ஏனடியோ
உண்மை காரணம் தெரிந்திருந்தால்
விசமாய் இருந்தாலும் குடித்திருப்பேன்
உன் பாதம் பணிந்தே இறந்திருப்பேன்
கனிவாய் நானும் சென்றிருப்பேன்
உருவமில்லா உள்ளமது
உருக்குலைந்து போனதடி
உன் உள்ளம் கல்லாய் மாறிடவும்
எந்த விசத்தை குடித்தாயோ
நீயும் எந்த விசத்தை குடித்தாயோ
கண்ணீரோடே செல்கின்றேன்
உன் நினைவுகளை கொண்டே செல்கின்றேன்..............