FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Arul on September 01, 2013, 09:03:44 PM

Title: என் அன்பே...
Post by: Arul on September 01, 2013, 09:03:44 PM
உன்னோடு பழகிய நாட்கள்
என் வாழ்வின் வசந்த நாட்கள்
உனை பிரிந்த நிமிடங்கள்
ஒவ்வொன்றும் என் வாழ்வின்
கசந்த நிமிடங்கள்

நீ என்னோடு கோபப்பட்டு பேசாமல்
போன நிமிடங்களில் இருந்து
என் அறிவிலந்து நான் செய்த
செயல்களோ ஏராளம்
அதில் என் உடல் முழுவதும்
விழுப்புண்கள் தாராளம்

நான் அடிபட்டு விழுந்து மயங்கிய போதும்
உன் நினைவுகள் மட்டுமே என் மனதில்
கண்கள் விழித்து பார்க்கும் வரை


உன் வார்த்தைகள் சங்கீதங்களாய் இசைத்து
கானம் பாடிக் கொண்டே எனை தாலாட்டி
தூங்க வைத்ததடி இரவுகள் முழுவதும்

எத்தனை துன்பங்கள் எனைத் தொடர்ந்து வந்தாலும்
உன் புன் சிரிப்பு ஒன்றே போதுமடி
அத்தனை துன்பங்களும் பஞ்சாய் பறக்குதடி

என் அன்பே

நீ ஏன் தான் என்னை வெறுத்தாயோ
என் உடல் முழுதும் வெகுமதி
அதிகம் கொடுத்தாயே
வெந்து போகுதடி என் இதயம்
ஒரு முறையேனும் எனைத் திரும்பி பார்திடடி
உன்னால் என் மனம் குளிருமடி................