FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: ராம் on September 01, 2013, 11:43:18 AM

Title: உன் முகம் கண்ட நாள் முதல்
Post by: ராம் on September 01, 2013, 11:43:18 AM
தன் உயிரை தேடும் ஓர் உயிர் !
உன் முகம் கண்ட நாள்
முதல் !
என் உறக்கம் தொலைத்தேனடி !
தொலைத்த உன்னை தேடி !
என் உயிர் சென்றதோ என் உடல் விட்டு !
மீண்டும் உன்னை தேடி அலைந்த போரட்டங்கள்
வெற்றி தான் !
ஏனோ என்னை கண்ட உடன் உன் விழி இரண்டும்
வெட்கத்தில் புதைந்துகொண்டதோ ?!
உன்னை கண்ட மகிழ்ச்சியில் பனியில் உரைந்து போன
நிலவாய் நான் !
உடைந்து போன என் வாழ்வை உன் இதழ் கொண்டு சேர்த்து
வைப்பாய் என்ற நம்பிக்கையில் நான் !