FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Arul on August 31, 2013, 05:28:52 PM
-
ஒரு வேளை இந்த பூமியில்
நிலைத்திருந்தால் எப்போதும்
மறவேன் உன் நினைவுகளை
பூமித் தாயே உன் மடி மீது
இன்றோடு துயில் கொள்ள
போகிறேன் தாலாட்டு பாடுவாயோ
எனக்கு
வான் மழையே உன்னிடம்
பிச்சை கேட்கிறேன் என்னை
குளிபாட்டுவாயோ கடைசி முறையாக
என் குளிர் காற்றே என் கடைசி
பயணத்தில் உன்னோடு அழைத்து
செல்வாயா கடைசி முறையாக
அக்னியே என்னை நீ
எரிக்கும் போது எனக்கென்று
உன் வெப்பத்தை குறைத்துக்கொள்
என்னவளின் நினைவுகள் என் இதயத்தில்
இருக்கிறது அதற்கு வலியில்லாமல் எரியூட்டு
கடைசி முறையாக
இறைவா இறுதி பயணம் என்னவளிடம்
இருந்து மறைத்துவிடு எங்கேனும்
ஓர் இடத்தில் வாழ்வேன் என்று
இறுதி வரை நினைத்திருப்பாள்
அவளும் வாழ்ந்திருப்பாள்...........................
-
உணர்வுகள், உணர்வுகளை வார்த்தையாய்
வெளிப்படுத்தியமை அழகு !!
எனினும் , கட்டமைப்பில் இன்னும்
கூடுதல் கவனம் செலுத்தலாம் ....!!
வாழ்த்துக்கள் !!!
-
மிக்க நன்றி Aasaiajiith
எனக்கு எந்த முறையில் எழுத வேண்டும் என்று உண்மையிலேயே எனக்கு தெரியாது என் மனதில் அப்பொழுது என்ன தோன்றுகிறதோ தோன்றுவதை அப்படியே எழுதுவது என் இயல்பு மீண்டும் கேட்டால் எனக்கே தெரியாது அஜீத்
எதுவும் முன்கூட்டியே தீர்மானம் செய்து எழுதுவது கிடையாது தவறு இருந்தால் மன்னிக்கவும்
-
இறைவா இறுதி பயணம் என்னவளிடம்
இருந்து மறைத்துவிடு எங்கேனும்
ஓர் இடத்தில் வாழ்வேன் என்று
இறுதி வரை நினைத்திருப்பாள்
அவளும் வாழ்ந்திருப்பாள்...........................
nice lines evlo nesichi ezhuthi iruka arul really nice kandipa unaval vazhvaal un ninaivil ena vazhthugiren un payanam iruthi payanam agamal ungal iruvarin kadhal payanamaga en venduthal irukum
kavithai ezhutha ilakkam arivu theyvai illa anubavam pothum kattamaippu theyvai illai adithalam poda nam tamil mozhi therinthal pothume un kavi payanam thodara vazhthukal
-
Micro
ஹா ஹா ஹா
என்னவளோடு காதல் பயணமா ? அதுவும் நீ சொல்ற
அப்ப சரி நிச்சயமா போவோம்........
ஆமா micro
தமிழ் மொழி ஒன்று அறிந்தால் யார் வேண்டுமானாலும் காவியம் படைக்கலாம் உண்மை...