FTC Forum

Special Category => சமையல் கலசம் => Topic started by: kanmani on August 30, 2013, 08:56:56 AM

Title: வாழைப்பழ டெஸர்ட் (குழந்தைகளுக்கு)
Post by: kanmani on August 30, 2013, 08:56:56 AM
தேவையான பொருட்கள்:

• 1. பழுத்த வாழைப்பழம் - 2
• 2. தயிர் - 1 கப்
• 3. தேங்காய் துருவல் - 1/2 கப்
• 4. முந்திரி, திராட்சை (விரும்பினால்)
• 5. எலுமிச்சை சாறு - சிறிது

செய்முறை:

• பழத்தை வட்டமாக வெட்டி எலுமிச்சை சாறில் பிரட்டி வைக்க வேண்டும்.
• தேங்காய் லேசாக வறுக்க வேண்டும்.
• முந்திரி, திராட்சை நெய்யில் வறுக்க வேண்டும்.
• அனைத்தையும் ஒன்றாக கலந்து பரிமாற வேண்டும்.