FTC Forum

Special Category => மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty => Topic started by: MysteRy on August 29, 2013, 09:15:02 PM

Title: ~ உதடு வெடிப்புக்கு...இயற்கை வைத்தியம் :- ~
Post by: MysteRy on August 29, 2013, 09:15:02 PM
உதடு வெடிப்புக்கு...இயற்கை வைத்தியம் :-

(https://fbcdn-sphotos-d-a.akamaihd.net/hphotos-ak-prn1/1236708_603680309654288_693898008_n.jpg) (http://www.friendstamilchat.com)


உதடுகள் அழகாக சிவப்பாக இருக்கத்தான் அனைவரும் விரும்புவார்கள். அழகாக இருக்க விருப்பம். ஆனா அவைகளை பராமரிப்பதில்லை. உதடுகளின் வெடிப்புகளுக்குத் தகுந்த சிகிச்சையை செய்ய பலரும் முயல்வதில்லை. வெறும் உதட்டு சாயம் உதடுகளை அழகாக காட்டாது. முறையான எளிய வைத்தியத்தை மேற்கொண்டாலே போதும்......

உதடு வெடிப்புக்கு...

சிலருக்கு அதிக குளிர் என்றாலும் சரி, அதிக வெப்பம் என்றாலும் சரி சுத்தமாக ஒத்துக்கொள்ளாது. உதடுகளில் பிளவுகள் ஏற்பட்டு காய்ந்து விடும். இன்னும் சிலருக்கு உதடுகள் கறுத்து, வெடிப்புகளும் ஏற்படும்.

இப்படிப்பட்டவர்கள் பாலாடையுடன் நெல்லிக்காய் சாறு கலந்து, அதை உதடுகளில் தடவி வந்தால், உதட்டின் கருமை நிறம் மறைந்து சிவந்த நிறம் உண்டாகும்.

வெண்ணெயுடன் ஆரஞ்சு பழச் சாறு கலந்து, உதடுகளில் தடவி வந்தாலும், உதடு வெடிப்புகள் சரியாகி உதடுகள் மென்மையாகும்.

ரோஜாப்பூவின் இதழ்களை எடுத்து காய்க்காத பசும்பாலில் போட்டு சிறிது நேரம் ஊற வைத்து எடுத்து நன்றாக பிசைந்து அதை உதட்டில் தடவி வந்தால் உதட்டின் வறட்சி, உதடு வெடிப்பு குறைந்து உதடு சிவப்பாகும்.