FTC Forum

Special Category => மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty => Topic started by: kanmani on August 27, 2013, 10:34:50 AM

Title: மூளைக்கு வலுவூட்டும் பலாக்காய்
Post by: kanmani on August 27, 2013, 10:34:50 AM
பலாக்காயை பிஞ்சாகத்தான் சமையலில் பயன்படுத்த வேண்டும். இது குளிர்ச்சியை கொடுக்கக் கூடிய காய் ஆகும். சூட்டை அகற்றி பித்தத்தைத் தணிக்கவல்லது.
இந்தக் காய் பலத்தையும் வீரிய புஷ்டியையும் தரும். மூளைக்கு வலுவை தரும். பெண்கள் இதை சாப்பிட்டு வந்தால் பால் நன்றாக சுரக்கும். ஆனால் வாத சிலேட்டுமங்களை வளர்க்கும் தன்மையும், அஜீரணத்தை அதிகப்படுத்தும் தன்மையும் இதனுடைய மைனஸ் பாயிண்டுகள் ஆகும்.

குன்மம், அஜீரணம், பலவீனம் ஆகியவை உள்ளவர் களும், நோய்வாய்ப்பட்டு உடல்நிலை சற்றுத் தேறியவர் களும் பலாக்காய் உண்ணக்கூடாது.

பலாக்காயின் தீமையைப் போக்க, காயை நன்றாக வேக வைத்து நீரை வடித்துவிடவும். கடுகும், காரமும் சேர்த்து சமைக்கவும். கூடவே சிறிது புளிப்பும் சேர்த்துக் கொள்ள வேண்டும். மிளகாய் வற்றலோ, பச்சை மிளகாயோ சேர்த்துக் கொள்ளல் நலம். இப்படி சமைப்பது பலாக்காயின் தீமைக்கு மாற்றாக அமையும். அதனுடைய தீமைகளை நீக்கி முழு பலனையும் பெறலாம்.