FTC Forum

Special Category => சமையல் கலசம் => Topic started by: kanmani on August 26, 2013, 10:35:22 PM

Title: கம்பு தோசை
Post by: kanmani on August 26, 2013, 10:35:22 PM


    கம்பு - 2 கப்
    இட்லி அரிசி - ஒரு கப்
    உளுந்து - கால் கப்
    வெந்தயம் - 2 தேக்கரண்டி
    சின்ன வெங்காயம் - 5
    காய்ந்த மிளகாய் - 2 (அ) 4
    சீரகம் - ஒரு தேக்கரண்டி
    கறிவேப்பிலை
    உப்பு

 

 
   

கம்புடன் அரிசி, உளுந்து, வெந்தயம் சேர்த்து களைந்து 4 மணி நேரம் ஊற வைக்கவும்.
   

நன்கு ஊறியதும் அரைக்கவும். பாதி மசிந்ததும் சின்ன வெங்காயம், காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை, சீரகம் மற்றும் உப்பு சேர்த்து தோசை மாவு பதத்தில் அரைத்து எடுத்து, மாவை 5 மணி நேரம் புளிக்கவிடவும்.
   

பிறகு தோசைக் கல்லை சூடாக்கி மாவை தோசையாக வார்த்தெடுக்கவும்.
   

சுவையான, சத்தான கம்பு தோசை தயார். அனைத்து வகையான சட்னியும் இதற்கு ஏற்றதாக இருக்கும்.